பிரேசில் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் » Sri Lanka Muslim

பிரேசில் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

201811041839388196_Organization-of-Islamic-Cooperation-slams-Brazil-decision-to_SECVPF

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாடும் தனது தலைமை பிரேசில் தூதரகத்தை இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
:
அமெரிக்காவின் நட்புநாடான இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிவ் இருந்து வருகிறது. இஸ்லாமியர்களும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் உரிமை கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக மாற்றும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் ஜெருசலேம் நகரில் தனது தலைமை தூதரகத்தை கடந்த ஆண்டு திறந்துள்ளது.

அமெரிக்காவை பின்பற்றி சில ஐரோப்பிய நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகருக்கு மாற்ற தீர்மானித்தன.

அவ்வகையில், பிரேசில் நாடும் தங்களது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவை அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் கூட்டமைப்பு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் பிரேசில் நாட்டின் அறிவிப்பு சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக இந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டு அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள ஜெய்ர் போல்சோனாரோ இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1969-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டமைப்பில் 53 இஸ்லாமிய நாடுகள் உள்பட ஒட்டுமொத்தமாக சுமார் 180 கோடி மக்கள்தொகையை 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Web Design by The Design Lanka