முஹர்ரம் விழாவில் “முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீடு » Sri Lanka Muslim

முஹர்ரம் விழாவில் “முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீடு

DSC04708

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

2017 தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களால் எழுதப்பட்ட “முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” எனும் நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.11.2018) தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

முஹர்ரம் விழாவில் ஓர் அங்கமாக கல்வியியலாளர் முஸ்தபா மஹ்ஸூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கனகையா தவராசா கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட நிலக் கிளி நாவலாசிரியர் அண்ணாமலை பாலமனோகரன் நூல் ஆய்வுரையை வழங்கினார்.

இதன்போது தேசிய மீலாத் வழிநடத்தல் குழுவின் தலைவர் ஏ.எல். ஹல்லாஜ் நூலாக்க குழுவினர் முன்னிலையில் அதிதிகளுக்கு நூலை வழங்கி வைப்பதையும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிர் பிரதம அதிதியிடமிருந்து முதல் பிரதி பெறுவதனையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

DSC04686

Web Design by The Design Lanka