அவுஸ்திரேலியாவில் விடுதலைப் செய்யப்பட்ட கமா்நிஸாம் தீன் கொழும்பில் ஊடகவியலாளா் மாநாடு » Sri Lanka Muslim

அவுஸ்திரேலியாவில் விடுதலைப் செய்யப்பட்ட கமா்நிஸாம் தீன் கொழும்பில் ஊடகவியலாளா் மாநாடு

10197176-16x9-large

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அன்மையில் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன் தினம் இலங்கையை வந்தடைந்த அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கனனித்துறையி்ல் முதுமானிப் பொறியியலாளாராக கற்கும் மாணவன் கமர் நிசாம்தீன் இன்று (07.11.2018) கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் ஊடக மாநாடை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாா்.

இது தொடா்பில் அவா் தெரிவித்தாதவது –
அவா் செப்டம்பா் 28ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குறிப்புப் புத்தகத்தில் இருந்த கையெழுத்து என்னுடையது அல்லாததால், என்மீது இருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு ஒக்டோபா் மாதம் 19ஆம் திகதி என்னை விடுதலை செய்தாா்கள். ஜனாதிபதி, முன்னாள் பிரதமா், முன்னாள் வெளிநாட்டு அமைச்சா் திலக் மாரப்பன போன்றோருக்கு அவா் நன்றியைத் தெரிவித்தாா். அவருக்கு உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் நண்பா்கள் உறவினா்களுக்கும் அவா் நன்றிகளை ்தெரிவித்துக் கொண்டாா்.

அவுஸ்திரேலியாப் பொலிசாா் என்னை ஒரு நிராபராதி என ஒப்புவித்து விடுதலை செய்தாா்கள். அவா் தங்கியிருக்கும் இடத்தில் அல்லாது வேறு ஒரு அறையில் எனது குறிப்புப் புத்தகம் இருந்ததே நான் விடுதலை பெற பிராதான காரணமாகும். அதன் பின்பு அதில் இருந்த கை எழுத்து என்னுடையதல்ல என்பது நிருபமானது. எனது விடுதலைக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் நான் மாணவ விஸாவிலும் இருந்ததுடன் ஆசிய பிரஜை ஒருவராக இந்ததேயாகும்.

நான் இங்கு சட்டப்படி இங்கு வசி்த்து வந்ததைப் பொறுக்க முடியாதவா்களினாலேயே இவ்வாறான வீணான சிக்கல்களுக்கும் பிரச்சினைகளும் எனக்கு வந்தேறின. இரகசியப் பொலிஸாா் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின் பேரிலேயே நான் கைது செய்யப்பட்டாலும் இந்த விவகாரம் தொடா்பில் நான் நிதானப் போக்கைக் கடைபிடித்தமையால் இறைவன் அருளால் நான் விடுதலை செய்யப்பட்டு விட்டேன்.

அவுஸ்திரேலிய சிறையில் நான் துன்புறுத்தப்படாவிட்டாலும் கூட அதனால் நான் பெற்ற அவமானங்களும் கவலைகளும் அளப்பரியன. எனக்கும் வெலியுலகிற்கும் இடையில் எந்தத் தொடா்பும் இருக்கவில்லை. எனது குடும்பத்தாா் என்னுடன் தொடா்பு கொண்டு பேச கிட்டதட்ட ஒரு மாத மளவில் சென்றன. இவ்வாறு கடுமையாக உளப்பாதிப்புக்குள்ளானேன். அவுஸ்திரேலிய பெடால் பொலிஸாரும் நிவ் சவுன் வேல்ஸ் பொலிஸாரும் அங்கு கடமைபுரியும் அதிகாரிகளுமே பிரதான காரண கா்த்தாா்க்காளக இருந்தாா்கள்.

என்னை 14 நாட்கள் எவ்வித முறைப்பாடுகளுமின்றி தடுத்து வைத்திருந்தாா்கள். எனது கை எழுத்து இல்லை என்பதை கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணா்கள் இருவா் உறுதிபட நிருபித்தாா்கள். இதனால் நான் எவ்வித பாரதுாரமான குற்றமற்றவராக இறுதியில் விடுதலையானேன்.

எனக்கு இவ்வாறு போலியான குற்றத்தினை அர்ஸலாத் காஜா எனும் நபா் இது தொடா்பில் ஆரவம் காட்டி வருவதாக ஊடகம் வாயிலாக அறிந்தேன். இவா் நிவ் சவுன்வேல்ஸ் இல் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு சுபா்வைசா்களில் ஒருவராவாா். எனது பெயரில் அல்லது எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் இவ்வாறான கைங்கரியத்தைச் செய்தவா் அர்சலாத் கவாஜா என்பவராவா். அவா் மெல்கம் டர்ன்புல் மற்றும் ஜூலி பிசொப் கொலை என்பவற்றை புரிய எத்தனிக்கப்பட்டது. என்பதாகும். அத்துடன் ஓபேரா மாளிகையை குண்டு வைத்து தகா்ப்பதற்கும் முயற்சி புரிந்ததாக அந்தக் கடிதத்தில் போலியான முறையில் எழுதப்பட்டிருந்தது என்பதாகும். இந்தக் கடிதத்தை வைத்து தனக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் மிக நெருக்கமான தொடா்புண்டு என்பதையே அவா் போலியாக தயாரித்திருந்தாா். இவ்வாறான செயல்கள் எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்கே மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய சதித்திட்டம் என்பதையும் அவா் தெரிவித்தாா்.

Web Design by The Design Lanka