ஆலயங்களிற்கு சென்ற மூன்று பெண்களின் நகைகள் கொள்ளை » Sri Lanka Muslim

ஆலயங்களிற்கு சென்ற மூன்று பெண்களின் நகைகள் கொள்ளை

rob1

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களிற்கு வழிபாட்டுற்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

தீபாவளி தினமான நேற்று(6) கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியினை அறுத்துக்கொணடு வேகமாகத் தப்பியோடியுள்ளனர்.அது தொடர்பில் தாலிக்கொடியை பறிகொடுத்தவர் முறைபாடு செய்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 3 பவுண் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.அத்துடன் கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு வழிப்பாட்டுக்கு சென்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு 2 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.இவ்விரண்டு சம்பவம் குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Web Design by The Design Lanka