அனர்த்த முகாமைத்துவ குழு ஆளுனரின் அதிரடி நடவடிக்கையால் உருவாக்கம் » Sri Lanka Muslim

அனர்த்த முகாமைத்துவ குழு ஆளுனரின் அதிரடி நடவடிக்கையால் உருவாக்கம்

20181107_110642

Contributors
author image

Hasfar A Haleem

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம அவர்களின் விசேட அதிரடி நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் தற்போதைய வெள்ள அனர்த்த அபாயத்தை எதிர் நோக்கும் பாதிப்புக்கள் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு இன்று புதன் கிழமை நியமிக்கப்பட்டது.

இக் குழுவின் தலைவராக மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர், வீதி அபிவிருத்தி பணிப்பாளர் போன்றோர்களும் அங்கம் பெறுகின்றார்கள்.

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் அவசர நடவடிக்கையாக இக் குழு அமைக்கப்பட்டது.
பாதிப்புக்கள் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகளை இன்றைய தினம் 4.00 மணிக்குள் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ குழு பணிப்புரை வழங்கியுள்ளது.

குடிநீர் வழங்குதல், உணவு ஏற்பாடுகள், குடியிருப்புக்கள் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உதவியளித்தல் போன்றனவும் இதன் ஊடாக மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

மேலதிக அவசர தேவை ஏற்படின் 0262226051 எனும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் தங்களது பாதிப்புக்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ குழுவின் இணைப்பாளரும் கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளருமான ஹஸன் அலால்தீன் அறிவுறுத்தியுள்ளார்.

மாகாண உள்ளூராட்சி அமைச்சும் மாகாண சுகாதார திணைக்களமும் இணைந்ததான நடவடிக்கைகளாக தொடர் வழிகாட்டலின் கீழ் குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் மாகாண உள்ளூராட்சி ஆடையாளர் எம்.மணிவண்ணன், மாகாண சுகாதார, மாகாண வீதி அபிவிருத்தி , சுகாதார பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Web Design by The Design Lanka