கடந்தகால தவறுகளை மஹிந்த செய்யக்கூடாது » Sri Lanka Muslim

கடந்தகால தவறுகளை மஹிந்த செய்யக்கூடாது

dfghjkl3

Contributors
author image

Editorial Team

பிர­த­ம­ராக நிய­மனம் பெற்­றுள்ள மஹிந்த ராஜபக் ஷ தான் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலப்­ப­கு­தியில் செய்த தவ­று­களை மீண்டும் செய்­யக்­கூ­டாது. அக்­கா­லத்தில் உங்­க­ளது ஆலோ­ச­கர்­க­ளாக இருந்­த­வர்கள் மீண்டும் உங்­களை வட்­ட­மி­டு­கி­றார்கள். அவர்­களை இணைத்துக் கொள்­ளக்­கூ­டாது. உட­ன­டி­யாக பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு ஜனநாயக ரீதியிலான அரசொன்று நிறுவப்படவேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது ஆலோசகர்களாக இருந்தவர்கள் அவரைத் தவறான வழியிலே வழிநடத்தினார்கள். இதனாலேயே அவர் தோல்வியை தழுவ வேண்டியேற்பட்டது.

எமது நாட்டின் அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும், ஒத்திவைப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது. ஆனால் இது விடயத்தில் இப்போது சபாநாயகர் நடுநிலைமை தவறி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். இன்றைய அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தொடரக்கூடாது. பாராளுமன்றம் தனது அமர்வினை ஆரம்பிப்பதற்கு இன்னும் 7 தினங்களே உள்ளன. பாராளுமன்றத்தில் முரண்பட்டுக் கொண்டுள்ள இருதரப்பும் கலந்துரையாடி பிரேரணையொன்றினைக் கொண்டு வந்து பாராளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

ஞானசார தேரர் மற்றும் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களே பின்னணியில் இருந்துள்ளன. சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக செயற்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தை சுயாதீனமாக செயற்படக் கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. பொலிஸ்மா அதிபரை மாற்ற வேண்டும். குற்றப் புலனாய்வு பிரிவிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும். பொதுபலசேனா அமைப்பு இப்போது மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்ந்து விட்டதாக ஐக்கியதேசியக் கட்சி கூறுகிறது.

பொதுபலசேனா எப்போதும் நீதியின் பக்கம் இருக்கும். பௌத்தத்திற்கும், நாட்டுக்கும் எதிரான செயற்பாடுகளைக் கண்டிக்கும். பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் தங்கியிருப்பது சட்டத்துக்கு முரணானது. அலரிமாளிகை ரணிலினதோ, மஹிந்தவினதோ சொத்தல்ல, அது உத்தியோகபூர்வ அரச இல்லமாகும். இதனை எதிர்த்தே நாம் போராடி வருகிறோம். இன்று கஞ்சா, போதைப் பொருள் பாவனையாளர்களின் தங்குமிடமாக அலரிமாளிகை மாறியுள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு, நல்லிணக்க அமைச்சராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்கிறோம். தொல்பொருள் பிரதேசங்களை அழிவிலிருந்தும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலைகளில் பயிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு தொல்பொருளை பாதுகாப்பது தொடர்பில் தெளிவூட்டப்படவேண்டும். இதற்கென சர்வகட்சி கமிட்டி ஒன்றை நியமித்து தொல்பொருள் அழிவினைத்தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். இந்த எமது யோசனையை நாம் அரசாங்கத்திடம் முன்வைக்கிறோம் என்றார்.

Web Design by The Design Lanka