ஆப்கானிஸ்தானில் இராணுவ ரீதியாக அமெரிக்கா வெற்றிபெற முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி » Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தானில் இராணுவ ரீதியாக அமெரிக்கா வெற்றிபெற முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி

f7

Contributors
author image

Editorial Team

ஆப்­கா­னிஸ்­தானில் இரா­ணுவ ரீதி­யாக அமெ­ரிக்கா வெற்­றி­பெற முடி­யாது என ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள அமெ­ரிக்க உயர்ட்ட இரா­ணுவ தள­பதி ஜெனரல் ஒஸ்ரின் ஸ்கொட் மில்லர் அண்­மையில் இடம்­பெற்ற நேர்­கா­ண­லொன்றில் ஏற்­றுக்­கொண்டார்.

வொஷிங்டன் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போர் என்ற போர்­வையில் 2001 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஆப்­கா­னிஸ்தான் மீது குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தலை­மைத்­து­வத்தின் கீழி­ருந்த அமெ­ரிக்­காவும் அதன் நட்பு நாடு­களும் இணைந்து படை­யெ­டுப்­பினை மேற்­கொண்­டன. இந்த நட­வ­டிக்­கை­யினால் தலி­பான்கள் ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டனர். எனினும் 17 ஆண்­டு­க­ளுக்கும் அதி­க­மான காலம் கடந்த பின்­னரும் அந் நாட்டில் வெளி­நாட்டுப் படை­யினர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். ஏனெனில் தலிபான் கிளர்ச்­சிக்­கா­ரர்­களை தோற்­க­டிப்­பதில் அமெ­ரிக்கா தோல்வி கண்­டுள்­ளது.

ஆப்கான் யுத்­தத்தை இரா­ணுவ ரீதி­யாக வெற்றி கொள்ள முடி­யாது, தலி­பான்­க­ளுடன் நேரடிப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­டு­வ­த­னூ­டாக மாத்­தி­ரமே சமா­தா­னத்தை அடைந்­து­கொள்ள முடியும் என என்.பி.சி செய்­திக்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­கா­ணலில் தெரி­வித்து, ஒஸ்ரின் ஸ்கொட் மில்லர் அதிர்ச்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். இதனை இரா­ணு­வ­ரீ­தி­யாக வெற்­றி­பெற முடி­யாது என அமெ­ரிக்க ஒலி­ப­ரப்­பா­ள­ரிடம் தெரி­வித்த ஒஸ்ரின் ஸ்கொட் மில்லர், அர­சியல் தீர்வே அதற்கு வழி எனவும் குறிப்­பிட்டார்.

இரா­ணுவ ரீதி­யாக தம்­மாலும் வெற்­றி­பெற முடி­யாது என தலி­பான்­களும் உணர்ந்­தி­ருப்­பார்கள் என்­பது எனது கணிப்­பாகும். இரா­ணுவ ரீதி­யாக நீங்கள் வெற்­றி­பெற முடி­யாது என ஒரு கட்­டத்தில் உணர்ந்­து­கொண்டால் சண்­ட­யி­டு­வது வீணா­னது. மக்கள் ஏன் சண்­ட­யி­டு­கி­றீர்கள் எனக் கேட்பார்கள். எனவே தாமதிப்பது தேவையற்றது. இப் பிரச்சினைக்கு அரசியில் ரீதியான தீர்வினைக் காண்பதற்கு முயற்சிப்பதே உசிதமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Web Design by The Design Lanka