இரண்டு அமைச்சர்கள், ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு » Sri Lanka Muslim

இரண்டு அமைச்சர்கள், ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

susil-premajayantha-upfa

Contributors
author image

Presidential Media Division

இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று முற்பகல் (08) ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
கௌரவ சுசில் பிரேமஜயந்த –
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சர்
கௌரவ பந்துல குணவர்தன –
சர்வதேச வர்த்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்
கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா –
நிதி இராஜாங்க அமைச்சர்

கௌரவ சாலிந்த திசாநாயக்க –
சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

கௌரவ சீ.பீ.ரத்நாயக்க –
போக்கவரத்து இராஜாங்க அமைச்சர்
கௌரவ எஸ்.எம்.சந்திரசேன –
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா –
சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

மூன்று அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்கள் பின்வருமாறு.

திரு. ஜே.ஜே. ரத்னசிறி –
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சு
திரு. எஸ்.பீ.கொடிகார –
சர்வதேச வர்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு
திரு. ஆர்.டபிள்யு.ஆர்.பேமசிறி –
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2018.11.08

Web Design by The Design Lanka