தொடர் காலநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் அவதி » Sri Lanka Muslim

தொடர் காலநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் அவதி

29190259

Contributors
author image

Junaid M. Fahath

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகமான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வாவிகளின் நீர் மட்டம் அதிகரித்து பொதுமக்களின் வாழ்விடங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால் நீரில் மிதந்து வரும் பாம்புகள் போன்ற விஷஜந்துக்களினால் பொதுமக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அச்சம் தெறிவிக்கின்றனர்.

தொடர்ச்சியான காலநிலை மாற்றத்தினால் மீன் பிடி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வதாரமும் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

2919025c

Web Design by The Design Lanka