ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை » Sri Lanka Muslim

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை

1541762317-mano-ganesan-2

Contributors
author image

Editorial Team

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனநாயகத்தை மதிக்கும், சிறந்த கொள்கையுடைய கட்சியானபடியால் பாராாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்ப்பதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்கால அரசியல் களத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை விளக்க கூட்டம் ஹட்டன் டி கே டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து வாகன பேரணி ஆரம்பமாகி ஹட்டன் டி கே டபிள்யூ கலாசார மண்டபத்தில் கூட்டம் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

அண்மையில் ஜனாதிபதி முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஆறு பேரையும் அழைத்து தமது புதிய அரசாங்கத்திற்கு அதரவு தருமாறு கேட்டுக்கொண்டு பாராளுன்றத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், அல்லது நடுநிலை வகிக்க வேண்டும், அல்லது ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ரணில் விக்கரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க ஒத்துழைப்பு வழங்க கூடாதென மூன்று விடயங்களை கோரிக்கையாக முன் வைத்தார்.

எனினும் அந்த மூன்று கோரிக்கையையும் நிராகரித்ததுடன் ஐக்கிய தேசிய முன்னணி பல கட்சிகளுக்கு சொந்தமானது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சகலரும் ஒடி ஒடி வாக்கு சேகரித்தோம். இதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே இது தனி ஐக்கிய தேசிய கட்சியல்ல. நீங்கள் முரண்பாடுகள் தொடர்பில் எம்மோடு ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதியிடம் நாம் கேட்போது, அவரிடமிருந்து பதிலெதுவும் இல்லை என்றார்.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பலராலும் பாராட்டப்படுகின்றதுடன், எமது கொள்கையை கண்டு பெரும்பான்மையினத்தவர்களும் எம்மோடு இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

Web Design by The Design Lanka