ஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு » Sri Lanka Muslim

ஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

President-Maithripala-Sirisena-1_850x460_acf_cropped

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

கௌரவ உதய கம்மன்பில
புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்

கௌரவ சீ.பி. ரத்னாயக்க
தபால், தொலை தொடர்புகள் அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
வர்த்தக, நுகர்வோர் அலுவல்கள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்

எஸ்.எம்.சந்திரசேன
பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்

மேற்படி அமைச்சர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை பின்வரும் அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கௌரவ காமினி லொக்குகே – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலிய
வள அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.11.09

Web Design by The Design Lanka