இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜனாதிபதி மைத்ரிபால » Sri Lanka Muslim

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜனாதிபதி மைத்ரிபால

_104250950_gettyimages-903704644

Contributors
author image

BBC

இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (09.11.2018) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு கையெழுத்திட்டதாக அரசாங்கத்தின் பதில் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.

கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் 113 எம்.பி.க்களின் ஆதரவு என்ற பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் – மகிந்த தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது.

Web Design by The Design Lanka