கல்முனை சாஹிராவின் புதிய அதிபராக ஜாபிர் கடமைகளைப் பொறுப்பேற்றார் » Sri Lanka Muslim

கல்முனை சாஹிராவின் புதிய அதிபராக ஜாபிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Contributors
author image

M.S.M.ஸாகிர்

கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆண்கள் கல்வி பயிலும் பிரபல பாடசாலையான கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் ஜாபிர் நியமிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தனது ஆரம்பக் கல்விய கமு/ அல் கமறூன் வித்தியாலயத்தில் கற்ற இவர், இடை நிலைக் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் பயின்றார்.

இதே பாடசாலையின் பழைய மாணவரான இவர், தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி என்பதுடன் 2003 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று, கடந்த 15 வருடங்கள் கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீ.எஸ்.சி (விஞ்ஞான இளமாணி – கணக்கியல்துறை) B.SC (Acc & Fin) Hons பட்டம் பெற்றதோடு, பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) (திறந்த பல்கலைக்கழகம்), கல்வி முதுமாணி (கிழக்கு பல்கலைக்கழகம்), ஆங்கிலத்தில் டிப்ளோமா (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கணனியில் டிப்ளோமா போன்ற பட்டங்களை பெற்று அனைத்து டிப்ளோமா கற்கையிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

2017 கல்விச் சேவைக்குள் இணைந்த இவர், கல்வித்துறையின் மூன்று சேவைகளான அதிபர் சேவை (SLPS), கல்வி நிர்வாக சேவை (SLEAS), ஆசிரியர் கல்வியலாளர் சேவை (SLTES) ஆகிய சேவைகளின் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றி, 3 சேவைகளிலும் ஒரு வருட காலத்திற்குள் சிறப்புத் தேர்ச்சி பெற்று சித்தியடைந்து சாதனை நிலைநாட்டியுள்ளார்.

புதிதாக நியமனம் பெற்று, கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.ஐ.ஜாபிர் அதிபருக்கு பாடசாலைச் சமூகத்தினர் மற்றும் பழைய — புதிய மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், பெற்றோர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

சிறந்த ஆளுமையும், தலைமைத்துவ இயல்பும், அனைவரோடும் நேர்மையாக பழகும் பண்பும் கொண்ட எம்.ஐ. ஜாபிர் அதிபரின் வருகையால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மேலும் முன்னேற்றமடைந்து இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என பாடசாலையின் பழைய – புதிய மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka