திஹாரி; மொலவியா டிப்ளோமா சான்றிதழ் வழங்கு » Sri Lanka Muslim

திஹாரி; மொலவியா டிப்ளோமா சான்றிதழ் வழங்கு

suma1

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

திஹாரியில் உள்ள சுமையா மகளிா் அரபிக் கல்லுாாியில் 10வது வருடப் பூர்த்தியும் 54 மௌலவியாக்கள் தமது 4 வருட மொலவியா டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பஸ்சியாலை எமிரேட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கண் வைத்திய நிபுணா் மரினா தாஹா கலந்து கொண்டாா். அத்துடன ஸ்தாபகா் ஜனாபா ஏ.எம் .சாமிலா, மற்றும் ஜூல்பிகா சரீப், அஷ்ஷேக் முஜீப்,அஷ்ஷேக் மிஹ்லாா், மற்றும் கல்லுாாி நிர்வாக சபைத் தலைவா் மற்றும் பணிப்பாளா்களும் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வில் மூதுாா், மற்றும் நாட்டின் நாலாபாகத்திலும் இருந்து இங்கு தற்பொழுது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் 80 மாணவிகளது பெற்றோா்களும் கலந்து சிறப்பித்தனா்.

suma3

sumay 5

suma1

Web Design by The Design Lanka