அக்குறணையில் 'ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்' நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

அக்குறணையில் ‘ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்’ நூல் வெளியீட்டு விழா

IMG-20180628-WA0035

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அக்குறணையில் நூல் வெளியீட்டு விழா

மத்திய மலைநாட்டின்,அக்குரணை நகரில் குருகொடை எனும் எழில் மிகு கிராமத்தை அழகூட்டி நிற்கும் மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் வரலாற்றில் மற்றுமோர் பக்கத்தைத் திறந்திடகஹடகஸ்திகிலிய, வெலிகொள்ளாவ எனும் கிராமத்தைப் பிறப்பிடமாக் கொண்ட அல் ஹாபில், அல் ஆலிம் ஏ.ஜீ.எம். வஸீம் மீஸானி எழுதிய ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும் எனும் நூல் வெளியீட்டு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை *(08/07/2018)* காலை 9:30 முதல் 11:30 வரை அக்குறணை மீஸானிய்யாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.

நூலாசிரியர் அக்குறணை மீஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று, தற்போது தன்னுடைய மேற்படிப்பை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடரும் அதேசமயம் தனது கன்னி நூலை தங்கள் கரங்களுக்குத் தரக் காத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

கல்வி மேம்பாட்டிற்கான அல் கைர் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி *கலாநிதி அஷ்ஷெய்க் மஸாஹிர் நளீமி* மற்றும் நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

உங்கள் அனைவரையும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

IMG-20180628-WA0035

Web Design by The Design Lanka