2018 தேசியமீலாத் விழா பிரதான நிகழ்வு கொழும்பு ஸாஹிராவில் 26ஆம் திகதி. » Sri Lanka Muslim

2018 தேசியமீலாத் விழா பிரதான நிகழ்வு கொழும்பு ஸாஹிராவில் 26ஆம் திகதி.

Contributors
author image

A.S.M. Javid

இவ்வருட தேசிய மீலாத் விழாவின் பிரதான நிகழ்வு எதிர்வரும் 26.11.2018 ஆம் திகதி திங்கற் கிழமை கொழும்பு -10 இல் உள்ள ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் பி.ப.2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் பங்குபற்றி முதல் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசுகள் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

முதல் இடங்களைப் பெற்று கௌரவிக்கப்பட இருக்கும் வெற்றியாளர்களுக்கான அழைப்புக்கடிதங்களை அவர்களின் பாடசாலைகளுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளது. குறித்த அழைப்புக் கடிதம்கள் கிடைக்கப் பெறாதவர்களும் கடிதம் கிடைக்கப் பெற்றவர்களும் குறித்த தினம் பிற்பகல் 1.45 மணிக்கு விழா மண்டபத்திற்கு வருகை தந்து தமது வரவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் கேட்டுக் கொள்கின்றார்.

கௌரவிக்கப்பட இருக்கும் வெற்றியாளர்கள் தமக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றிருப்பின் அதனை தவறாது கொண்டு வருவதுடன் தாய், தந்தை அல்லது பாதுகாவலர்கள் இருவர் விழா மண்டபத்திற்குள் வருகை தரலாம். இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசுகளை திணைக்களம் பிரிதொரு தினத்தில் விரைவில் வழங்கி வைக்கும் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka