மாவனல்லையின் விருட்சத்துக்கு ஒரு விருது - எச். எம். யூ. நிசார் உடையார் » Sri Lanka Muslim

மாவனல்லையின் விருட்சத்துக்கு ஒரு விருது – எச். எம். யூ. நிசார் உடையார்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் ஆசிரியர்களை மதித்து அவர்களை ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத் தாமே சிறப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் கௌரவ. எச். எம். யூ. நிசார் உடையார் ஆசிரியர் அவர்களை மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை) சார்பாக விருது வழங்கி கௌரவித்தது

23 நவம்பர் 2018 (வெள்ளிக்கிழமை) அமீரகம் அபூ தாபி நகரில் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றுக்கும் அதிகமான பழைய மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர் பணியில் பொன் விழா கொண்டாடிய எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் ஆசான் கௌரவ. எச். எம். யூ. நிசார் உடையார் அவர்கள் எமது மாவனல்லை ஸாஹிரா பாடசாலைக்கு ஆற்றிய சேவைகள் சொல்லில் அடங்கா. பாடசாலையின் பிரதி அதிபராகவும், சிரேஷ்ட தமிழ் ஆசிரியாகவும் பணியாற்றிய இவரின் காலம் பாடசாலையின் பொற்காலம் என்றால் மிகையாகாது

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்” என்ற வாக்கிற்கு இணங்க ஆசிரியர் பணி, அரசியல் பணி, சமூகப் பணி, பொருளாதாரப் பணி என்ற வகையில் பன்முகப்பட்ட சிந்தனையாளராய் விரிந்து பரந்த தமது செயற்பாடுகளைத் தூர நோக்கில் அமைத்துக்கொண்டமையால் அவர் மாவனல்லை மண்ணின் ஒரு முக்கிய பிரமுகராக இன்றும் திகழ்து வருகிறார்

சமூகச் சேவைகள் மட்டுமன்றி சிறந்த ஆளுமையும் அறிவாற்றலும் மிக்க இவரது செயற்பாடுகள் பல வரையறுக்கப்பட முடியாதவை. பாடசாலை அபிவிருத்தி, வளங்களை விருத்தி செய்தல், தரமான வசதிகளை ஏற்படுத்தல், ஆசிரியர்களை வழி நடத்துதல், மாணவர்களின் ஒழுக்க நலன்களை வளர்த்தல், தூர நோக்கு திட்டமிடல் போன்ற செயல் பாடுகளினால் பல தலை முறைகளை வழிநடாத்தியன் மூலம் மாவனல்லை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவர்.

ஊர் மக்கள் கல்வியில் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும், மாணவர் ஒழுக்க சீலராய் வாழ வேண்டும் மற்றும் சிறந்த நட்பிரஜையாக பாடசாலையில் இருந்து வெளியேற வேண்டும் என ஊரின், பாடசாலையின் முன்னேற்றம் கருதி அல்லும் பகலும் அயராது உழைத்தவர் ஆவர். அதுவே அவரது இலட்சியமாகும். அதை நிலை நாட்டியவரும் ஆவர். அந்த வகையில் அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் மாவனல்லை மண்ணிறகுப் பெருமை தேடித்தந்துள்ளன என்றால் மிகை ஆகாது.

இதயத்தில் நிறைந்து உள்ள ஆசானே, விழுதுகள் விட்டுச் சென்ற வினைதிறன் ஆசான் பற்றி இன்னும் பல புத்தகங்கள் எழுதலாம். மனிதநேயமிக்க நல்லாசிரியரை மனதார வாழ்த்துகிறோம்!

அன்புடன்,
திரு. ஷம்ரான் நவாஸ்
மாவனல்லை ஸாஹிரா
பழைய மாணவர் சங்கம்
அமீரக கிளை

Photo 2 Photo 1

Web Design by The Design Lanka