தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு ! » Sri Lanka Muslim

தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு !

Contributors
author image

Junaid M. Fahath

கத்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் “Job Vacancies” WhatsApp குலுமம், Sri Lankan Community Development Forum (CDF) மற்றும் Srilankan Muslim Professional Forum – Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை (Career Guidance Workshop – 2018) அண்மையில் நடாத்தியது.

தோஹாவில் அமைந்துள்ள அல் பனார் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (23 -11 -2018) பிற்பகல் 02:30 மணிமுதல் 04:30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வானது தலைசிறந்த வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

மேலும் இந்நிகழ்வில் கத்தாரில் பறந்து வாழும் சுமார் 400 க்கும் மேற்பட்ட இலங்கை சகோதரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களினால் இவ்வரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதந்த ஏற்பாட்டு குழுவினரை வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CGW - 02

Web Design by The Design Lanka