வாழைச்சேனை ஆயிஷா மாணவி இமாஸா கணித புதிர் போட்டியில் சாதனை » Sri Lanka Muslim

வாழைச்சேனை ஆயிஷா மாணவி இமாஸா கணித புதிர் போட்டியில் சாதனை

1543406311285_02

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)


கண்டி பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் பட்டதாரி ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக அண்மையில் நடாத்தப்பட்ட கணித புதிர் போட்டியில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.ஐ.எப். இமாஸா கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி எம்.ஐ.எப். இமாஸா இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி தேசிய ரீதியிலும் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த போட்டியில் பங்குபற்றி சாதனை புரிந்த மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமுகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

குறித்த சாதனை மாணவியோடு பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், மாணவியின் தந்தை இல்யாஸ், ஆசிரியர்களான ஜே.எம்.நியாஸ், எம்.ஐ.றியாஸ் ஆகியோர்களை படத்தில் காணலாம்.

Web Design by The Design Lanka