காத்தான்குடியில் அத்துவைதிகளின் செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டி ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பாரிய கையெழுத்து சேகரிப்பு பணி. » Sri Lanka Muslim

காத்தான்குடியில் அத்துவைதிகளின் செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டி ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பாரிய கையெழுத்து சேகரிப்பு பணி.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(S. சஜீத்)


ஜம்இய்யதுல் உலமாவினதும், சம்மேளனத்தினதும் தீர்மானங்களை மீறி காத்தான்குடி பிரதேசத்தில் அத்துவைத கொள்கை சார்ந்தவர்களினால் இஸ்லாத்திற்கு முரணாக நடைபெற்று வரும் மௌலூது, கந்தூரி, றாத்திபு போன்ற வழிகேட்ட ஷிர்க்கான செயற்பாடுகளுக்கு காத்தான்குடி எல்லைப்பகுதிக்குல் எக்காரணம் கொண்டும் காத்தான்குடி நகரசபை இட அனுமதி வழங்கக் கூடவேன வேண்டி (30)  ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பல பள்ளிவாயல்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் கேகரிக்கும் பணி நடைபெற்றது.

இப்பணியை காத்தான்குடி இஸ்லாமிய பொது நலன் விரும்பிகள் ஏற்பாடு செய்து சேகரித்திருந்தனர்.

இறுதியில் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கையெழுத்துயிட்ட ஆதரவு ஏட்டினை நகரசபை தவிசாளரிடம் கையளித்து குறித்த செயற்பாடுகளை எமதூரில் நடைபெறாமல் ஆக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2018-11-30 at 2.22.26 PM

Web Design by The Design Lanka