வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம் » Sri Lanka Muslim

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம்

RM20 (1)

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (2-12-2018) பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.

நுால் வெளியீடு இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம் அருஸ் அவா்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சா் எம்.எஸ்.அமீர் அலி, கலைச்செல்வன் ரவுப், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், கருத்துறை கலாபூசனம் திக்குவல்லை கமால், நயவுரை  ஜி. இராஜகுலேந்திரன், கவி வாழ்த்து யாழ் அஸீம், நவமணி ஆசிரியா் என்.எம் அமீன், கலாபூஷனம் மு. சிவலிங்கம், நிகழ்ச்சித் தொகுப்பு திக்குவல்லை ஸூம்ரி ஏற்புரையை நுாலாசிரியா் வெலிகம ரிம்ஸா முஹம்மதும் நிகழ்த்தினாா்.

கொழும்பு பல்கலைக்கழக உளத்துறை விரிவுரையாளா் யு.எல்.எம் நௌபா், கவிஞா் மூதுாா் முகைதீனும் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனா்.

இந் நிகழ்வின்போது கின்னியா இலக்கிய வட்டத்தின் நுாலாசிரியை பொன்னாடை போற்றி பட்டமும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

RM26

Web Design by The Design Lanka