சாட்சி மறுக்கப்பட்டதாக கதறி அழும் அன்புள்ள பலகத் துறைத் தாய்க்கு » Sri Lanka Muslim

சாட்சி மறுக்கப்பட்டதாக கதறி அழும் அன்புள்ள பலகத் துறைத் தாய்க்கு

tear1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

.

இவ்வருட ஷவ்வால் தலைப் பிறைகண்டதாக தாங்கள் கூறிய சாட்சி மறுக்கப்பட்டதால் தாங்கள் மிகவும் மனவேதனை அடைவதாகவும் தங்களை மிம்பர் மேடையில் ஜம்இய்யாவின் தலைவர் கேவலப்படுத்தியதாகவும் தாங்கள் கதறியழும் வீடியோ காட்சியைக் காணக் கிடைத்தது.

நானும் கடலோரப் பிரதேசத்தில் வாழும் தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த ஓரளவு ஷரீஆவைக் கற்ற பெண் என்ற வகையில் சில விடயங்களை உங்களுக்கும் சமூகத்துக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இஸ்லாத்தில் சாட்சியம் என்பது மிகப்பெரும் அந்தஸ்த்தை வகிக்கின்றது அதனால்தான் அல் குர்ஆன் பொய்ச் சாட்சியத்தை இணைவைப்புடன் இணைத்துக் கூறியுள்ளது.

எனவே விக்கிரக வணக்கங்களின் அசிங்கத்தைத் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும் பொய்ச் சாட்சியத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

(ஸுறா அல் ஹஜ் வசனம் 30)
அவ்வாறே றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும்; பொய்ச் சாட்சியத்தை பெரும்பாவங்களில் மிகக் கொடியதாக கூறியுள்ளார்கள்.
றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துர் றஹ்மான் இப்னு அபீ பக்றத றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஒரு முறை) பெரும்பாவங்களில் கொடியதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (சஹாபாக்களைப்) பார்த்து மூன்று முறை கேட்டார்கள், அதற்கவர்கள் ஆம் சொல்லுங்கள் என கூறினார்கள். அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, சாய்ந்துகொண்டிருந்த நபியவர்கள் (எழுந்து) உட்கார்ந்து பொய் சொல்வது, பொய்ச் சாட்சியம் சொல்வது எனக் கூறினார்கள்.

எனவே இஸ்லாத்தில் சாட்சியம் என்பது மிகவும் பெறுமதியானது, சாட்சியத்தை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. சாட்சியத்துக்கு இத்துனை அந்தஸ்த்தை வழங்கியிருக்கும் இஸ்லாம் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் வழிமுறைகளைக் காட்டியிருக்கின்றது.

ஒருவர் சாட்சியம் சொன்னால் அவருடைய சாட்சியத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது ஒன்றும் உலக மரபிலோ இஸ்லாமியக் கண்ணோட்டத்திலோ கட்டாயமானதல்ல. சாட்சியத்தை விசாரித்து தீர்ப்பளிக்கும் இடத்திலிருப்போருக்கு அதனை அதற்குரிய நிபந்தனைகளோடு ஏற்கவும் மறுக்கவும் பூரண உரிமையுண்டு.
சாட்சியம் மறுக்கப்பட்டதற்காக கதறியழும் என் அன்பான பலகத்துறைச் சகோதரியே.

இன்றைய நீதிமன்றங்களில் மறுக்கப்படும் சாட்சிகளெல்லாம் உங்களைப் போன்று வாய்விட்டுக் கதறியழுது வீடீயோ வெளியிட்டால்; எப்படியிருக்கும்? சாட்சிகள் அழுகிறார்கள் என்பதற்காக நீதிபதிகள் தீர்ப்பை மாற்றுவார்களா? இவ்வுலக நலன்களை மாத்திரம் அடிப்படையாகக்கொண்ட நீதிபதிகளே யாரும் அழுகிறார்கள் என்பதற்காக தீர்ப்பை மாற்றாதபோது இருபது இலட்சம் முஸ்லிம்களின் நோன்போடு, அல்லாஹ்வின் பொருத்தத்தோடு சம்பந்தப்பட்ட விடயத்தில் யாரும் அழுவார்கள் என்பதற்காக தீர்மானம் எடுக்;க முடியுமா? என் அன்பான சகோதரியே இது எத்துனை சிறுபிள்ளைத் தனமானது என்பதை யோசித்துப் பாருங்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சாட்சிகளை மறுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை உங்களைப் பேட்டி கண்ட உலமாக்களாவது உங்களுக்கு சொல்லித் தரவில்லையா? நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரக்குழந்தை தன் தந்தையான அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கேடயம் தொடர்பில் சொன்ன சாட்சி மறுக்கப்பட்ட வரலாற்று உண்மை உங்களுக்குத் தெரியுமா? தனது சொந்த விடயத்தில் சாட்சி மறுக்கப்பட்ட நேரத்தில்கூட நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட அந்த உத்தமர்களுக்கு முன் தான் கண்ட பிறை ஏற்றுக் கொள்ளப்;படவேண்டுமென அழுது புலம்புவது எவ்வகையில் சகோதரி நியாயமாகும்.

சாட்சியங்களை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் மௌலவி ழபர் அஜ்வத் அவர்கள் பேசிய ஓடியோவையாவது நீங்கள் கேட்டிருக்கலாம். ஏனெனில் அவரும் நம்மைப் போன்ற ஒரு தவ்ஹீத் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான்.

ஜம்இய்யாவின் தலைவர் முப்தி றிஸ்வி அவர்கள் உங்களை மிம்பர் மேடையில் அவமானப் படுத்தியதாகவும் தாங்கள் அவரை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும் பேட்டி கொடுத்திருந்தீர்கள். அவர் பேசியதை முழதாக நீங்கள் செவிமடுக்கவில்லை. சிலதை மாத்திரம் கேட்டுவிட்டு உங்களது உணர்வை வெளிப்படுதிதயிருக்கிறீர்கள்.

உண்மையில் உங்களுக்கு அநியாயம் செய்தவர்கள் உங்கள் வீடு தேடிந்து உங்களை பேட்டி கண்டு ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் முழு உலகுக்கும் பொய்ச் சத்தியம் செய்த 54 வயதுத் தாய் நீங்கள்தான் என அறிமுகம் செய்தவர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா?

பலகத்துறையைச் சேர்ந்த் 54 வயதுத்த தாய் என்று மிகவும் கண்ணியமாகவே அவர் கூறியிருந்தார். யார் என்பது யாருக்கும் தெரியாது அது முடி;ந்துபோன கதை. ஆனால் உங்களை வீடுதேடிவந்து, பேட்டி கண்டு விடீயோவை வெளியிட்டவர்கள் முழு நாட்டுக்கும் உலகுக்கும் உங்களை அறிமுகம் செய்து உங்களையும் உங்களது பரம்பரையையும் அவமானப் படுத்தி விட்டார்கள்.

அன்பான தாயே நீங்கள் அவரை மன்னிக்கவேமாட்டேன் என்று அழுகிறீர்கள் நீங்கள் அவரை மன்னிக்க அவர் தவறேதும் செய்யவில்லை. அவர் ஷரீஅத்தைச் சரியாக செய்திருக்கிறார்.

ஷரீஅத்திலும் உலமாக்களின் தலைவர் விடயத்திலும் வரம்பு மீறி நடந்துகொண்டதற்காக நீங்கள்தான் அல்லாஹ்விடத்திலும் ஜம்இய்யாவின் தலைவாரிடத்திலும் மன்னிப்புக் கோரவேண்டும். இல்லையெனில் தாங்கள் ஷரீஅத்தில் விளையாடியதன்; விபரீதத்தை மிக விரைவில் கண்டு கொள்வீர்கள். உங்களினதும் உங்களது பரம்பரையினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களது பிறைச் சாட்சியத்தை நம்பி கடந்த 2018.06.15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் பெருநாள் கொண்டாடியவர்களிலும் நானும் ஒருத்தி. எனினும் தங்களது இந்த வீடியோ நீங்கள் உண்மைக்காகப் போராடவில்லை. சுயஇலாபம்கொண்ட சிலரின் தூண்டுகோலில் கைபொம்பையாக நடிக்கீறீர்கள் என்ற சந்தேகத்தை எனக்கு மட்டுமல்ல என்னோடு பெருநாள்கெர்ணடாடிய பலருக்கும் உண்டுபண்ணியுள்ளது. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

பர்சானா கரீம்.
விஞ்ஞான ஆசிரியை,
மில்லத் மகளிர் வித்தியாலயம்.
காத்தான்குடி

Web Design by The Design Lanka