திருமதி புர்கார் பீ இப்திகாரின் கணவர் காலமானார் - முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் - Sri Lanka Muslim

திருமதி புர்கார் பீ இப்திகாரின் கணவர் காலமானார் – முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவியும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி புர்கான் பீ இப்திகார் அவர்களின் கணவர் அல்ஹாஜ் எம் எச் எம் இப்திகார் (வயது 70) இன்று காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இலக்கம் 101 நவரட்ன ஜெயவீர மாவத்த கித்தம்பஹூவ வெள்ளம்பிட்டிய இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று (03.12.2018) அஸருக்கு பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

கொழும்பு 12 வாழைத்தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் எம் எச் எம் இப்திகார் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சுமார் ஐந்து ஆண்டுகளாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று காலமானார்.

அன்னாரது மறைவு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது மறுமை வாழ்வுக்காக பிரார்திப்பதாக மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team