தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய தலைவராய் ஹம்ஜாட் நியமனம் » Sri Lanka Muslim

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய தலைவராய் ஹம்ஜாட் நியமனம்

news (7)

Contributors
author image

ஊடகப்பிரிவு

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய தலைவராய் ஹம்ஜாட் நியமனம்.
ஊடகப்பிரிவு

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத் தலைவராக ஹம்ஜாட் அமைச்சர் றிஷாட் புதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரான ஹம்ஜாட் புதிய பதவியினை தேசிய கூட்டறவு அபிவிருத்தி திணைக்களத்தில் பொறுப்பேற்றதன் பின்னர் இங்கு உரையாற்றிய நிறுவனத் தலைவர், கடந்த காலங்களை விட இந்த நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல தன்னால் முடியுமான முயற்சிகளை அமைச்சர் றிஷாட் பதியுதீனோடு இணைந்து முன்னெடுக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.

இலங்கையில் கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கவும் பொல்கொல்லையில் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தை தேசிய ரீதியில் இந்நிறுவனத்தின் கிளைகளை நாடு பூராகவும் விஸ்தரிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தன்னிடம் வேண்டிக்கொண்டதாகவும், தான் இந்நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வேன் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரான ஹம்ஜாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இஸ்மாயில், கூட்டுறவு ஆணையாளர் நசீர், அமைச்சரின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸடீன் எனப் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

news (1)

news (7)

Web Design by The Design Lanka