துருக்கி தூதரகமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி - 2018 » Sri Lanka Muslim

துருக்கி தூதரகமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி – 2018

Turkish Embassy

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கொழும்பிலுள்ள துருக்கி தூதரகம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து ஊடகவியாளர்கள் மற்றும் எதிர்கலாத்தில் ஊடகவியாளர்களாக வர எதிர்பார்ப்பவர்களின் சர்வதேச உறவுகள் தொடர்பான அறிவை விருத்தி செய்யும் நோக்கத்தின் ஓர் அங்கமாக கட்டுரை போட்டி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

ஊடகவியலாளர்களாக பணிபுரிபவர்கள் மற்றும் ஊடகவியல் கல்வியை தொடரும் மாணவர்கள் இந்த கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

“பிராந்திய சக்தியாக உலகிலும் பிராந்தியத்திலும்; துருக்கியும் அதன் வகிபாகமும்” (Turkey and her role in the region and the world as a regional power) எனும் தலைப்பில் இந்த கட்டுரை அமைய வேண்டும். கட்டுரைகள் ஆங்கிலத்தில் மாத்திரம் எழுதப்படவேண்டும் என்பதுடன் 750 மற்றும் 1000 சொற்களுக்குள் அமைய வேண்டும்.

ஊடகவியலாளராயின் தான் ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் ஊடக கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களாயின் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களையும் தங்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் இணைத்து 2018 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

அனுப்பவேண்டிய தபால் முகவரி: இல. 41/2, விஜித்த வீதி, நதிமால, தெஹிவளை.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : muslimmediaforum@gmail.com (மின்னஞ்சல் மூலமாக அனுப்புவார்கள் மின்னஜலில் ‘Subject’பகுதியில் “Essay Competition – 2018” என டைப் செய்து உங்கள் பெயருடன் அனுப்ப வேண்டும்)

வெற்றியாளர்களுக்கு துருக்கி தூதரகம் பின்வரும் பரிசில்களை வழங்கவுள்ளது.

• முதல் பரிசு : மடிக்கணினி மற்றும் கமெரா

• 2ம் பரிசு : மடிக்கணினி

• 3ம் பரிசு : கமெரா

ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

Web Design by The Design Lanka