இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு எதிரான வழக்கு ஜனவரி 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு » Sri Lanka Muslim

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு எதிரான வழக்கு ஜனவரி 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு

courts

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமத்திபால போட்டியிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலை நிராகரிக்க உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு, நிஷாந்த ரணத்துங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு , மூன்றாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேக்கர ஆகியோர் முன்னிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும், மூன்றாம் திகதி வேறு பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால், குறித்த வழக்கை, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவில், இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளருக்காக திலங்க சுமத்திபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், திலங்க சுமத்திபால குறித்த பதவிக்காகப் போட்டியிட்டால், விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் என, மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka