தேசிய மீலாத் விழாவும்,முசலியும் » Sri Lanka Muslim

தேசிய மீலாத் விழாவும்,முசலியும்

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை மையமாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் கௌரவிக்கு முகமாக அரச அனுசரணையுடன் வருடா வருடம் தேசிய மீலாத்விழா கொண்டாடப்படுவது வழக்கம், இவ்விழாவுக்காக ஒவ்வொரு வருடமும் ஒருமாவட்டம் தெரிவுசெய்யப்பட்டு அங்கு தேசிய மீலாத் விழா நடைபெறும். இதில் ஜனாதிபதி/பிரதமர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்வர். வெளிநாட்டுத் தூதுவர்கள், பிறமதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.

அபிவிருத்திநடடிக்கைகள், இனநல்லுறவுவு, கலாசார நடவடிக்கைகள், நடமாடும் சேவைகள், புத்தக வெளியீடுகள்,போட்டி நிகழ்வுகளின் பரிசளிப்புக்கள், உரைகள், பாடல்கள் எனப் பல நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

2018 மீலாத்விழா மன்னார் முசலியில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.இந்த நிகழ்வு இங்கு நடைபெற வேண்டுமென்பதற்காக முந்நாள் அமைச்சர் றிசாத் பதியுதின் பெரும் முயற்சி எடுத்தார். இதற்கு முந்நாள் பிரதமரும்,முந்நாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் பூரண ஆதரவு வழங்கி இருந்தனர். யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீள்குடியேறிய மக்கள் வசிக்கும் இப்பிரதேசம் தெரிவுசெய்யப்பட்டது மிகப்பொருத்தம் ஆகும்.

தமது பிரதேசம் தேசிய மீலாத்விழாவுக்காக தெரிவு செய்யப்பட்டதனால் அபிவிருத்தி கிடைக்கும், பிரதேச வரலாற்று நூல் வெளியாகும்,நாட்டின் நாலாபக்கங்களிலும் வாழும் மக்கள் ஒன்று கூடுவர் எமது கலை, கலாசாரம் ,வாழ்நிலை சவால்கள் என்பவற்றை நேரடியாக கண்டுகொள்வர் என கனவுகண்டுகொண்டு இருந்தவேளை ஜனாதிபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு யாவற்றையும் புரட்டிப்போட்டது. இது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போன்றதாகும்.

எம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியே எமது மீலாத் விழாவை தடுத்துவிட்டார்,இதை நாம் ஒரு போதும் மறக்கவும்[மன்னிக்கவும் மாட்டோம்.

ஆறுவாரங்களாக அரசியல்குழப்பம் தொடர்கிறது.அரசியல் இஸ்திரத் தன்மை ஏற்பட்டதும். ஏலவே,திட்டமிட்டபடி தேசிய மீலாத்விழா முசலி தேசிய பாடசாலையில் நடாத்தப்பட வேண்டுமென பிரதேச மக்கள் பலமாக கோரிக்கை விடுகின்றனர்.

Web Design by The Design Lanka