ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

court

Contributors
author image

Editorial Team

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை சற்றுமுன்னர் 07 நீதியரசர்கள் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

பின்னிணைப்பு – மு.ப. 10.10

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (06) மூன்றாவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

நேற்று முன் தினம் 04ம் திகதி ஆரம்பமான விசாரணையின் இறுதிநாள் இன்றாகும்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka