அமைச்சர் றிஷாட்டை வசைபாடும் கொந்தராத்துக் காரர்களுக்கு...! » Sri Lanka Muslim

அமைச்சர் றிஷாட்டை வசைபாடும் கொந்தராத்துக் காரர்களுக்கு…!

rishad

Contributors
author image

பரீட் இஸ்பான்

அமைச்சர் றிஷாட்டின் அபிவிருத்தி, உரிமைப் போராட்டங்களை சகிக்க முடியாத மாற்றுக் கட்சிக்காரர்களும், திட்டமிட்ட குழுக்களும் தொடர்ந்தேர்ச்சியாக வசைபாடி அவர்களது கொந்தராத்து வேலைகளை செவ்வனே செய்து வருகின்றார்கள் என்பதே நிதர்சனம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் றிஷாட்டுக்கு பைல்கள் இருப்பதாகவும் அவர் ஆட்சி மாற்றத்துக்கு முன்வரமாட்டார் என்றும் பலர் சவால் விட்டனர்.

மின்னல் ரங்காவும் அமைச்சர் றிஷாட் ஒரு சிறைக்கைதி, எனப் பிரச்சாரம் செய்தார். அவர் மஹிந்த அரசை விட்டு வெளியேற முடியாது என்று சவால் விட்ட போதும் முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று மஹிந்த அரசை விட்டு அமைச்சர் றிஷாட் வெளியேறினார்.

அன்று அவர்கள் விமர்சித்தது போன்று அமைச்சர் றிஷாட்டுக்கு பைல்கள் இருந்திருந்தால் வெளியேறி இருக்கமாட்டார். மஹிந்த அரசுக்கு பகிரங்க சவால்விடுத்து வெளியேறியவர் அமைச்சர் றிஷாட்டே. அதன் பின்னரே தபால் வாக்கும் முடிந்த பின்னரே முஸ்லிம் காங்கிரசினர் கரையொதிங்கினர்.

தற்போது அமைச்சர் றிஷாட் வில்பத்தை அழித்து விட்டதாகவும் வில்பத்துவில் அமைச்சருக்கு பல்லாயிரம் காணிகள் இருப்பதாகவும். அமைச்சர் றிஷாட் ஊழல் செய்துள்ளதாகவும் பல கொந்தராத்துக் குழுக்கள் உண்மைககக்குப் புறம்பான திட்டமிட்ட பல கதைகளை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வில்பத்துவில் தானோ தனது சமூகமோ ஓரங்குல காடுகளையும் அழிக்கவில்லை என்றும், முடியுமானால் நிரூபிக்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அத்தோடு அரசின் அமைச்சரவையில் இருக்கின்ற போதும் தனது சமூகத்துக்கு ஆபத்தான விடயங்கள் நடைபெறுகின்றபோது வறக்காப்பொலயில் வைத்து பகிரங்கமாக அரசாங்கத்துக்கு “கடந்த அரசாங்கம் செய்த தவறை நீங்களும் (ஜனாதிபதி மற்றும் பிரதமர்) செய்தால் வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்” என எச்சரித்தமையானது அமைச்சர் றிஷாட் சமூகத்துக்காக எப்பொழுதும் குரல் கொடுக்கக் கூடிய தலைவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

அமைச்சர் றிஷாட் மீது இன்று வரை சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை எச்சரித்துப் பேசுவது என்பது மிகவும் இலேசான விடயமல்ல. அத்தோடு இந்த கொந்தராத்துக் குழுக்கள் பரப்பும் குற்றச்சாட்டுக்கள் இலங்கையில் உள்ள சகல விசாரணை திணைக்களத்துக்கு சமர்ப்பித்தும் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்களாகவே சமூக வலைத்தளங்களில் அபாண்டமாகவே வலம் வந்துகொண்டிருக்கின்றன.

தான் குற்றமுள்ளவராக இருந்திருந்தால் அரசாங்கத்தை ஒரு சிங்கள பிரதேசத்தில் இருந்து பகிரங்கமாக எச்சரித்திருக்கமாட்டார். அத்தோடு தனக்கு பைல்கள் இருந்திருந்தால் மஹிந்த அரசை விட்டு வெளியேறியும் இருக்க மாட்டார்.

இன்னும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அமைச்சருக்கு எதிராய் கொந்தராத்துக் குழுக்கள் விமர்சித்துக் கட்டுக்கதைகளும், கற்பனைகளும் வெறும் பணத்துக்காக ஜால்ரா போடும் கொந்தராத்துத் தொழிலே.

கொந்தராத்துக் குழுக்களே இனியாவது உங்களது கால நேரங்களை நல்ல விடயங்களுக்காக பயன்படுத்துங்கள் மறுமையிலாவது பிரயோசனமாக அமையும்.

Web Design by The Design Lanka