யாழ் குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலை உயர்வு » Sri Lanka Muslim

யாழ் குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலை உயர்வு

banana13

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ் குடாநாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் வாழைப்பழங்களின் விலைகளில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி பொதுச்சந்தை மருதனார்மடம்சந்தை யாழ் நகரப்பகுதிசந்தை கல்வியன்காடு சந்தை சாவகச்சேரி சந்தை ஆகியவற்றில் இன்றைய (6) விலை நிலைவரப்படி ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 100 ரூபா முதல் 80 ரூபா வரையிலும் ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 120 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ்.குடாநாட்டில் தற்போதைய காலநிலை மற்றும் சந்தைப்படுத்துவதில் சிக்கல் காரணமாகவே வாழைப்பழ விலை உயர்வுக்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர வெளிமாவட்டங்களில் இருந்து முன்னர் போன்று வாழைப்பழங்கள் வராமையினால்லும் தற்போதைய காலநிலை காரணமாகத் தரமான வாழைக்குலைகள் சந்தைக்கு எடுத்துவரப்படுவதில்லை என்ற காரணத்தினாலும் விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பல ஆலயங்களின் வருடாந்த மஹோற்சவங்கள் ஆரம்பமாகவுள்ளமையால் கதலி வாழைப்பழத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

Web Design by The Design Lanka