கட்சி அரசியல் பார்க்காது என்னோடு இணைந்து பணியாற்றியவர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் » Sri Lanka Muslim

கட்சி அரசியல் பார்க்காது என்னோடு இணைந்து பணியாற்றியவர் இஸட்.ஏ.எச்.றஹ்மான்

Harees MP

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

றியாத் ஏ. மஜீத்


கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக என்னோடு இணைந்து பணியாற்றிய முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், பொலிஸ் பரிசோதகருமான இஸட்.ஏ.எச்.றஹ்மானின் திடீர் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் என முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில,

தனது பிரதேசத்தின் அபிவிருத்திற்காக அரசியல் தலைமைகளோடு சுமுக உறவைப் பேணி பணியாற்றும் வல்லமை கொண்டவர் மர்ஹூம் இஸட்.ஏ.எச்.றஹ்மான்.

நான் 2002ம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையில், மருதமுனை அல்-மனார் பாடசாலைக்கு அன்றைய கல்வி அமைச்சராகவிருந்த கருணாசேன கொடிதுவக்குவவை அழைத்து வருவதற்கு அன்றைய அபிவிருத்திச் சபையின் செயலாளராக பணியாற்றிய இஸட்.ஏ.எச்.ரஹ்மான் கட்சி அரசியல் பார்க்காது பூரண ஒத்துழைப்பு வழங்கி அமைச்சருக்கு பாரிய வரவேற்பு வழங்கியமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

மருதமுனையின் அபிவிருத்திக்கு நான் முதல்வராக கடமையாற்றிய காலப்பகுதியில் என்னோடு இணைந்து பங்களிப்பினை வழங்கியவர். பிரதேச மக்களின் நலனில் தனிப்பட்ட அக்கறையுடன் செயற்பட்ட மனித நேயம் கொண்டவர். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான விடயத்தில் கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் பங்களிப்புச் செய்தவர்.

அண்மையில் அரசியலிருந்து விலகி நாட்டின் பாதுகாப்புச் சேவையில் மீண்டும் இணைந்து பொலிஸ் பரிசோதகராக சேவையாற்றியவர். அன்னாரின் இழப்பு நாட்டுக்கும் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவில் துயரடையும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க இறைவனிடம் பிரார்த்திற்கின்றேன்.

Web Design by The Design Lanka