நஞ்சருந்திவிட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற யுவதி » Sri Lanka Muslim

நஞ்சருந்திவிட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற யுவதி

poision

Contributors
author image

Farook Sihan - Journalist

நஞ்சு அருந்தி விட்டு பொலிஸ் நிலையம் சென்ற யுவதி தான் கொண்டு சென்ற கடிதத்தை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு மயங்கி விழுந்த சம்வம் நேற்று(6) இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய சென்று அங்குள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் தன்னிடமிருந்த மூன்று பக்க கடிதத்தை ஒப்படைத்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் அதை வாசித்துக் கொண்டிருந்த போதுஇ அந்த யுவதி மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார் அவரை அவசர அம்பியூலன்ஸிற்கு தூக்கி சென்றபோது வாயிலிருந்து நுரை வெளியேறியது. நச்சு திராவக மணமும் வீசியது.

இதையடுத்து அவசர அம்பியூலன்ஸில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் யுவதி சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Web Design by The Design Lanka