முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கி » Sri Lanka Muslim

முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கி

uthuman

Contributors
author image

M.J.M.சஜீத்

இறக்காமம்- நாவலடி வட்டையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கி காணி உத்தரவு பத்திரத்திற்கான காணிகளை விடுவிக்க தீர்மானம்.


இறக்காமம் நாவலடி வட்டையில் 142 முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள அம்பாறை மாவட்ட அரச அதிபரால் விதிக்கப்பட்ட தடையினை நீக்கி காணி சொந்தக்காரர்கள் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன் மொழிந்தார்.

இந்த காணி பிரச்சினையை தீர்ப்பதற்கு 3 வருட காலமாக விஷேட குழு தெரிவு செய்யப்பட்டு கள விஜயம மேற் கொண்டு முதற்கட்டமாக 21 முஸ்ஸிம்களுக்குரிய காணிகளை விடுவித்து விவசாயிகளிடம் கையளிக்க தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் சில இனவாத சிந்தனையாளர்கள் முஸ்லிம்களின் உத்தரவு பத்திரங்களுக்கு ஒதுக்கிய காணிகளை வழங்காது வேறு ஒரு காட்டு பகுதியினை காட்டி மொத்தமாக ஒரே இடத்தில் காட்டினை துப்பரவு செய்து 21 முஸ்லிம் விவசாயிகளுக்குரிய காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சட்ட விரோதமானதாகும் எனவே, பரம்பரையாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம்களின் உத்தரவு பத்திரங்களுக்குரிய காணிகளை வழங்க வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்ஸிம்களுக்குரிய காணிகளை பெறுவதற்கு மூன்று வருடங்கள் போராட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே, முஸ்ஸிம்களுக்குரிய உத்தரவுப்பத்திரங்களுக்குரிய காணிகளை வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பதனை மாவட்ட அரச அதிபர் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து முஸ்ஸிம்கள் 21 பேருக்கான உத்தரவுப்பத்திரங்களுக்குரிய காணிகளை அடையாளம் கண்டு இக்காணிகளை வழங்குவதற்கு விஷேட குழு தெரிவு செய்யப்பட்டது. இறக்காமம், தமன பிரதேச செயலாளர்கள், அம்பாறை மாவட்ட நிள அளவையாளர்கள், ஆகியோர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இக்காணிகளை விடுவிக்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது.

இறக்காமம் பிரதேச தமன எல்லைகளை காரணம் காட்டி 2016 ம் ஆண்டு மாகா போகத்தில் விவசாயம் செய்வதற்காக அனுமதிப்பதனை மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அறிவித்தும் 03 வருட காலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் உள்ளது என தெரிவித்தார்.

Web Design by The Design Lanka