கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சருக்கு பேஸ்புக் மூலம் அச்சுறுத்தல் » Sri Lanka Muslim

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சருக்கு பேஸ்புக் மூலம் அச்சுறுத்தல்

courts

Contributors
author image

S.Ashraff Khan

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரனுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது.

வைத்திய கலாநிதி முரளீஸ்வரன் இது தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அதே வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் மீது சந்தேகம் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கை மேற்கொண்டனர். நீதிமன்றம் சந்தேக நபருக்கு அழைப்பாணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தில் ஆஜரான சந்தேக நபரை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் திறந்த நீதிமன்றத்தில் பகிரங்கமாக எச்சரித்தார். சந்தேக நபரை ஆதரித்து ஆஜரான சட்டத்தரணிகள் பிணை வழங்க கோரினர்.

எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 வரையிலான நேரத்துக்குள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி கையொப்பமிட வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவரின் ஆட்பிணையிலும், 25,000 ரூபாய் காசு பிணையிலும் சந்தேகநபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

Web Design by The Design Lanka