பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான காணி » Sri Lanka Muslim

பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான காணி

pottuvil

Contributors
author image

M.J.M.சஜீத்

மக்கள் வாழும் பொத்துவில் பிரதேசத்தில் இதுவரை பொது விளையாட்டு மைதானம் இல்லாமல் நீண்ட காலமாக இப்பிரதேச மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். பல தடவைகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொத்துவில் சர்வோதயபுர பிரதேசத்தில் அமைந்துள்ள அரச காணி (10 ஏக்கர்) விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்குமாறு தீர்மாணம் மேற்கொண்டு வன திணைக்களம் இதுவரையும் இவ்விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிக்கவில்லை.

இதனால் பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானம் தொடர்பான நடவடிக்கைகள் பின்னடைவு.
எனவே, பொத்துவில் விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார். அம்பாறை மாவட்ட வன அதிகாரி திரு. முனசிங்க இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவித்து தருமாறு வளத்திணைக்கள பணிப்பாளரிடம் சிபாரிசு செய்து அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.

இதே வேலை பொத்துவில் சின்னஉல்லே அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் மீனவர்களின் சுமார் 160 படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடம் இல்லாமல் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே, இம்மீனவர்களின் நலன்கருதி எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு பொத்துவில் சின்ன உல்லே அறுகம்பே பிரதேச மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான 03 இடங்களை அடையாளம் கண்டு அவைகளை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.

பொத்துவில் அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் உள்ள 160 படகுகளை நிறுத்தி வைப்பதற்கான பொருத்தமான 03 இடங்களை அடையாளம் காண்பதற்கு விஷேட குழு தீர்மாணிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட நிள அளவையாளர்கள், பொத்துவில் பிரதேச செயலாளர், கல்முனை மாவட்ட மீனவர் திணைக்கள பணிப்பாளர், நகர அபிவிருத்திப் பணிப்பாளர் கொண்ட குழுவினர் பொத்துவில் உல்லே அறுகம்பே கடற்கரை பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கையினை சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Web Design by The Design Lanka