மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள் » Sri Lanka Muslim

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள்

_102369657_a2f57d65-7e01-4825-a456-2b596c4b405a

Contributors
author image

BBC

மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ரசாக், இரவு முழுவதும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் ஊழல் என மூன்று குற்றச்சாட்டுகளை ரசாக் எதிர்கொள்கிறார்.

மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நஜிப், 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பில்லியன்கணக்கான டாலர்கள் காணாமல்போனது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தார்.

Web Design by The Design Lanka