இந்த ஆண்டில் இது­வரை 25 பலஸ்­தீன சிறு­வர்கள் இஸ்­ரே­லினால் படு­கொலை » Sri Lanka Muslim

இந்த ஆண்டில் இது­வரை 25 பலஸ்­தீன சிறு­வர்கள் இஸ்­ரே­லினால் படு­கொலை

palstine_children1

Contributors
author image

Editorial Team

2018ஆம் ஆண்டு ஆரம்பம் தொடக்கம் இது­வரை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்­குக்­கரை மற்றும் காஸா பள்­ளத்­தாக்கில் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தி­னரால் 25 சிறு­வர்கள் சுட்­டு­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சிறுவர் உரி­மை­க­ளுக்­கான அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்று தெரி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச சிறுவர் பாது­காப்­புக்­கான பலஸ்­தீன அமைப்பு கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் காஸா பள்­ளத்­தாக்கில் மாத்­திரம் கொல்­லப்­பட்ட 21 சிறு­வர்­களின் உயி­ரி­ழப்­புக்கு இஸ்­ரே­லியப் படை­யி­னரே கார­ண­மெனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­க­ளு­ட­னான காஸா எல்­லையில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்­ப­மான மீளத் திரும்­பு­வ­தற்­கான மாபெரும் ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கு­பற்­றிய 18 சிறு­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரே­லியப் படை­யினர் வேண்­டு­மென்றே 21 சிறு­வர்­களை உண்­மை­யான துப்­பாக்கிக் குண்­டு­களைப் பயன்­ப­டுத்தி சுட்டுக் கொன்­ற­தா­கவும் அவர்­களுள் பதி­னொரு பேர் தலை­யிலும் கழுத்­திலும் சுடப்­பட்­டுள்­ளனர் என்றும் அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி இஸ்­ரே­லியப் படை­யி­னரால் சுடப்­பட்­டது தொடக்கம் 15 வய­தான யூஜுப் ஜாகஸர் என்ற சிறுவன் தொடர்பில் எந்தத் தக­வலும் இல்லை. பின்னர் குறித்த சிறுவன் இறந்­து­விட்­ட­தாக இஸ்­ரே­லியப் படை­யினர் அறி­வித்­தனர், எனினும் ஜனா­ஸாவை ஒப்­ப­டைக்­க­வில்லை.

பலஸ்­தீன சிறு­வர்கள், அவர்­க­ளுக்கு நேரடி அச்­சு­றுத்­த­லாக இல்­லா­த­போ­திலும் இஸ்­ரே­லியப் படை­யினர் உண்­மை­யான துப்­பாக்கிக் குண்­டு­களைப் பயன்­ப­டுத்தி அச் சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச சட்­டத்தைப் பட்­ட­வர்த்­த­ன­மாக மீறும் வகையில் பலஸ்­தீன சிறு­வர்­களை சுட்­டுக்­கொன்ற அல்­லது காயங்­களை ஏற்­ப­டுத்­திய இஸ்­ரே­லியப் படை­யி­னரைக் கைது செய்­யு­மாறும் அவ்­வ­றிக்­கையில் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

காஸா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தது 135 பலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக 14,811 பேர் காயமடைந்துள்ளதோடு அவர்களுள் 366 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-Vidivelli

palstine_children1

Web Design by The Design Lanka