டிஜிற்றல் மயமாகும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் தேசிய சேவையும் முஸ்லீம் சேவையும் » Sri Lanka Muslim

டிஜிற்றல் மயமாகும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் தேசிய சேவையும் முஸ்லீம் சேவையும்

slbc4

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

டிஜிற்றல் மயமாகும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் தேசிய சேவையும் முஸ்லீம் சேவைநேயா்களுக்கு தரமான சேவையை வழங்கும் மற்றுமொரு முயற்சியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தழிழ் தேசிய சேவை டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கலையகத்தில் இருந்து இன்று (04) சேவையை இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் சித்தி எம். பாறுக் , பணிப்பாளா் நாயகம் ஏரானந்த ஹெற்றியாராச்சி, செயற்பாட்டுப் பணிப்பாளா் எம். ஜே.ஆர்.டேவிட் , தமிழ் சேவை பணிப்பாளா் ஆர். கணபதிப்பிள்ளை, ஆகியோா் கலந்து கொண்டனா்.

இலங்கை வானொலியின் தமிழ் தேசிய சேவை, எவ்.எம். 102.1 , 102.3 ஆகிய பண்பலை வரிசைகளில் ஒலிபரப்பாகின்றன. இந்தச் சேவையில் தமிழ் வர்த்தக சேவை முஸ்லீம் சேவை , கல்விச் சேவை என்பன ஒலிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்து , பௌத்த, இஸ்லாமிய கிறிஸ்த்துவ, சமய நிகழ்ச்சிகளும் தமிழ்த் தேசிய சேவையைில் ஒலிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல் மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சிகளும் சமகால நிகழ்ச்சிகளுடன் மருத்துவம், சட்டம், இலக்கியம், மகளிா் மற்றும் சிறுவா் , விவசாயம், கிராமிய, கலை , கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியகளும் இடம் பெறுகின்றன.

அத்துடன் கர்நாடக இசைக கச்சேரிகளும் ்இலங்கைக்கே உரித்தான மெல்லிசைப் பாடல்களும் பாராளுமன்ற சமய கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நோ்முக வர்ணனை நேரடி அஞ்சல் போன்றவையும் தமிழ் வர்த்தக சேவையில் சினிமாப் பாடல்களுடன் கூடிய பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் முஸ்லீம் சமய நிகழ்ச்சிகளுடன் முஸ்லிம் கலை கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருவதாக தமிழ்ச் சேவை ஆர். கணபதிப்பிள்ளை இங்கு தெரிவித்தாா்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் சேவைகள் பல்வேறு வகைகளிலும் பொலிவூட்டு வருவதுடன் சுமாா் 20 கோடி ருபா செலவில் உட்கட்டமைப்பு வசதிகளும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவா் மேலும் தெரிவித்தாா்.

slbc1

slbc4

slbc 8

Web Design by The Design Lanka