வெளிநாட்டு காசுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமை விற்கப்படுகின்றதா? » Sri Lanka Muslim

வெளிநாட்டு காசுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமை விற்கப்படுகின்றதா?

muslim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூ ஹபீப்


இவ்வருட ஷவ்வால் மாதப் பிறை விடயமாக கொழும்பு பெரிய பள்ளிவாயல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களம் எடுத்த தீர்மானம் பிழையானது என்று கூறி. இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் யார்?அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்படுபவர்கள் யார்?இவர்களின் நோக்கம் என்ன? பிறை விடயத்தில் மூன்று அமைப்பும் சேர்ந்து எடுத்த தீர்ப்பில் அகில இலங்கை ஜம்இய்யாவை மாத்திரம் குறிவைத்து வீடியோக்களை செய்து மக்கள் மயப்படுத்துவதின் நோக்கம் என்ன? என்ற கோள்விகளுக்கு மக்கள் கட்டாயம் பதில் காணவேண்டும்.

யஹுதிகள் பேன்று முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வினையாக செயற்படுபவர்கள் ஒருபோதும் குர்ஆன் ஹதீஸ் படி தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் என்று எந்த உள்ளத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

குர் ஆன் ஹதீஸ்படி எனது வாழ்வை அமைத்துக் கொண்டவன் என்ற அடிப்படையில் எனக்கு விளங்க முடிந்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

திஹாரியை சேர்ந்த ஒரு அமைப்பு அண்மை காலமாக இலங்கையில் உள்ள எல்லா தஃவா அமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையும் அதன் தலைவரையும் சாடியும் ஏசியும் செயற்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமே.

இஜ்திகாதுடன் சம்பந்தப்பட்ட இவ்விடயத்திற்காக இவ்வளவு தூரம் தங்களை அலட்டிக் கொண்டு செயற்பட்ட இவர்களால் ஏன் உம்மத் ஒன்று பட்டிருக்கும் இறுதி நபித்துவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் காதியானிகள் விடயத்தில் அலட்சியம் காட்டுகின்றார்கள்?

இலங்கையில் தற்போது காதியானிகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

திரு குர் ஆனை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து முஸ்லிம் அல்லாதோருக்கு மிக வேகமாக அன்பளிப்பு செய்து வருகின்றார்கள்.

உண்மையில் இந்த திஹாரியை சேர்ந்த அமைப்பு முஸ்லிம்களின் நேர்வழிக்காகத் தான் நாம் பிறை விடயத்தில் இவ்வாறு முயற்சி எடுத்து மக்களுக்கு தெளிவு வழங்குகின்றோம் என்று கூறுவீர்களாயின் ஏன் இன்னும் காதியானிகளுடைய விடயத்தில் பின் வாங்கி மழுப்பிக் கொண்டு இருக்கின்றீர்கள்?

அக்காதியானிகளுடன் ஏன் இன்னும் ஒரு நேர் காணலை செய்ய விரும்பவில்லை?

இக்கேள்விக்கு பதில் அக்காதியானிகள் வெளி நாட்டு காசுக்கு ஆசைப்பட்டு இலங்கையில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகின்றனர். இஅமைப்பும் இவ்வாறு செயல்படுகின்றார்களா என்ற கேள்வியே பதிலாகும்.

உண்மையில் இந்த தவ்ஹீத் அமைப்பு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நலவு நடக்க வேண்டும் என்பதற்காக செயற்படுகின்றது என்றால் ஏன் இது வரை காலம் இலங்கை பூராக சுத்திய உங்களால் தனது சந்தேகங்களுக்கு தெளிவு வேண்டும் என்பதாக *உத்தியோக பூர்வமாக ஜம்இய்யாவையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ நாடவில்லை?* அவ்வாறு நாடுவதே குர் ஆன் ஹதீஸை பின்பற்றிய ஸஹாபாக்களின் பழக்கமாகவும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகவும் மனித நாகரீகமாகவும் இருக்கின்றது.

அதை உதாசீனப்படுத்தி அர்த்தமற்ற வீடியோக்களையும் நேர்காணல்களையும் ஏற்பாடு செய் செய்வதன் எதார்த்தம் எங்கே செல்கின்றது.

இதில் நான் குறிப்பாக சொல்ல நினைக்கின்றேன் எனக்கும் பிறை விடயாக பல கேள்விகளும் சந்கேங்களும் ஜம்இய்யாவின் செயற்பாட்டில் அதிருப்தியும் ஏற்பட்டது. நான் அது விடயமாக ஜம்இய்யத்துல் உலமாவை நாடினேன். எனது சந்கேத்தையும் கேல்விகளையும் முன்வைத்தேன்.

ஜம்இய்யாவின் செயற்பாடுகள் பற்றிய தெளிவுகளை கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

அல்லாஹ் அந்த அமைப்பின் தலைவருக்கு பூர்த்தியான உதவியையும் ரஹ்மத்தையும் அருள வேண்டும்.

எனக்கும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

என்றாலும் அவர்களுடைய அணுகு முறைகள் என்னை மிகவும் கவர்தன.

அதில் குறிப்பாக அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தைச் சார்ந்த எல்லா அமைப்புகளையும் ஒரே குடைக்குக் கீழ் ஒன்று சேர்த்த சிறந்த தலைவராகவே அவர் திகழ்கின்றார்.

•காதியானிகளின் விடயத்தில் இறுதி நபித்துவத்தை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட பிரகடனத்தில் ஜம்இய்யா அனைத்து தேசிய முஸ்லிம் அமைப்புக்களினதும் மற்றும் நிறுவனங்களினதும் அனுசரணையை பெற்றே அப்பிரகடனத்தை மக்கள் மயப்படத்தியது.

•ஷீஆக்களின் அட்டூழியத்திலிருந்து இஸ்லாத்தைப் பாதுகாக்க மனாகிபுஸ் ஸஹாபா மாநட்டு பிரகடனமும் இவ்வாறே அமைந்தது.

ஓற்றுமைப் பிரகடனம். சகவாழ்வுப் பிரகடனம், ISIS பற்றிய நிலைப்பாடு,MMDA என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

நான் இதில் ரிஸ்வி முப்தி என்ற தனிநபருக்கு வக்காலத்து வாங்குவதற்காகக் கூறவில்லை.

சில ஆளுமைகளையும் திரமைகளையும் மதிக்க வேண்டும்.
அவர்களுடைய செயற்படுகளில் திருப்தி இல்லை என்றால் நேரடி சந்திப்புக்களை ஏற்படுத்தி தெளிவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லது எது சரியே அதை ஆலேசணையாக கூறவேண்டும். இதுவே உண்மையான மார்க்க அறிஞர்களின் சிறப்பம்சமாகும்.

அதற்கு மாற்றமாக செயற்படுவது கிளர்ச்சியாளர்கள் தேச துரோகிகள் முஸ்லிம்களை காட்டிக் கொடுப்பவர்களின் அணுகு முறையாகும்.

என் அன்பு சகோதரர்களே! கருத்து வேறுபாடு என்பது ஸஹாபாக்களின் காலத்திலிருந்து இருந்து வந்த விடயமாகும். எனவே நாம் இதை வைத்துக் கொண்டு எம்மத்தியில் பிளவுகளையும் சண்டைகளையும் ஏற்படுத்த முயற்சிப்போமானால் எந்த சந்தேகமும் இல்லை. முஸ்லிம்கள் முஸ்லிம்களை அழித்துக் கொள்ளும் காலம் மிக நெருக்கமாக தான் இருக்கும்.

அல்லாஹ் நம் அனைவரையும் இவ்வாறான செயற்பாடுகளிருந்து பாதுகாப்பானாக!

Web Design by The Design Lanka