ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் » Sri Lanka Muslim

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

slfp

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரவபொத்தான தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் புதிய பெண் தொகுதி அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் குறித்த தொகுதிகளின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத் தலைவர்களாகவும் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-07-04

Web Design by The Design Lanka