கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மேலதிக இணைப்பு பாதை » Sri Lanka Muslim

கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மேலதிக இணைப்பு பாதை

_01

Contributors
author image

ஊடகப்பிரிவு

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைக்கப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டத்தின் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மேலதிக இணைப்பு பாதைகளை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையி (04) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்திற்கு இந்தியா அரசாங்கம் 200 பில்லியன் ரூபாவை கடனுதவியாக வழங்கியுள்ளது. 15KM தூரம் வரையான இந்த இணைப்புப் பாதை 2020 இல் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் என பலர் பங்குபற்றினர்.

_01

Web Design by The Design Lanka