நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடத்துவதில்லை ; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம் » Sri Lanka Muslim

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடத்துவதில்லை ; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

????????????????????????????????????

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகையில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த ஆண்டு நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளார் இது மிகவும் வேதனைக்குரியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் பேட்டி


திருச்சி

பிஜேபி ஆர் எஸ்.எஸ்.கொள்கையை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தான் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகையில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த ஆண்டு நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளார் இது மிகவும் வேதனைக்குரியது. சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க கூடாது , இந்தியா முழுவதும் சமூக நல்லிணக்கம் என்பது தேவை புரியவேண்டும் என்று திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம். காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்டம், எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி ஆகியோர் சார்பில் சமய நல்லிணக்க ரமலான் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.எம். நிஜாம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் மாநில முதன்மை துணைத் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்,வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி அப்துல் வஹாப், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர் அல்ஹாஜ் வக்கீல் ஜி.எஸ்.ஏ. மன்னான், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவன இயக்குநர் அமுதன் அடிகள், மாலைக்கோட்டை மாயாண்டி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. ஜவஹர் ஆகியோர் ரமலான் சிறப்புகளை பற்றியும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 600 பேருக்கு ஏழை எளிய ஆண், பெண்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கலந்து கொண்டு ரமலான் சிறப்புகளை பற்றியும் இந்த இஃப்தார் நிகழ்ச்சி எதற்காக நடத்தப்படுகிறது என்பதையும் விளக்கி பேசினார். பின்னர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் ஏழை எளிய ஆண் பெண்களுக்கு 600 பேருக்கு இலவச வேட்டிகளை வழங்கி இருக்கிறார்கள். இது மிகவும் வரவேற்றதக்க தாகும். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் கடமையாகும்.நோன்பு இருப்பது ஆன்மீக பயிற்சியாகும்.

நோன்பு இருப்பது பற்றி தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள ரகசியமாகும் யார் உண்மையான முறையில் நோன்பு இருப்பது பற்றி கடவுளுக்கு தான் தெரியும். இந்த நோன்பின் நோக்கம் என்ற வென்றால் நோன்பயாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். ஏழை எளிய மக்கள் யார் என்று கணகெடுப்பு எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். நோன்பு வைப்பதற்கு உணவுகள் வாங்கி கொடுப்பது, நோயாளிகளுக்கு உதவி செய்வது, கடன் வாங்கி கொண்டு அடைக்க முடியாதவர்களுக்கு படம் கொடுத்து கடனை அடைக்க செய்வது, படிப்பதற்கு உதவி செய்வது, நமது வீட்டில் அருகே உள்ளவர்களை முதலில் யார் ஏழை எளிய மக்கள் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும். உறவினர்கள் யாரெல்லாம் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து முதலில் உதவிகள் செய்யவேண்டும் இது தான் ரமலான் செய்ய வேண்டிய தலையாயா கடமையாகுமா.

அது மட்டுமல்லாமல் ஜெயில் உள்ள முஸ்லிம்களுக்கும் உதவி செய்ய வேண்டும். திருமணம் முடிக்கமால் இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவிகள் செய்வது போன்ற உதவிகளை ரமலான் மாதத்தில் அதிக அளவில் செய்வார்கள். இது தான் இவர்களுக்கு அதிக நன்மைகள் தரக்கூடிய விஷயாமகும்.வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் மத நல்லிணக்கம் விதமாக இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற பி.ஜே.பி. அரசு எந்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் முஸ்ஸிம்கள் தேர்தலில் நிற்பதற்க்கு சீட் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையில் கவனமாக இருக்கிறது.

பிஜேபி ஆர் எஸ்.எஸ்.கொள்கையை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தான்சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகையில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த ஆண்டு நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளார் இது மிகவும் வேதனைக்குரியது. சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க கூடாது , இந்தியா முழுவதும் சமூக நல்லிணக்கம் என்பது தேவை புரியவேண்டும். இந்திய ஜனாதிபதி என்பவர் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் என்றில்லாமல் அனைவருக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். இந்த இஃப்தார் நிகழ்ச்சி ரத்து செய்து இருப்பது போல எல்லாம் வகையிலும் ஆர்.எஸ்.எஸ். சொல்லுகிற படி செய்கிறது. வெட்டம் வெளிச்சம் ஆகிவிட்டது.

பி.ஜே.பி. அரசுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்லில் தோல்வி கண்டுள்ளது. ஓட்டு மொத்த கட்சிகள் ஓன்றாக இணைந்து பி .ஜே. பி. அரசை வீட்டிற்கு அனுப்ப தயராகி வருகிறார்கள். அதற்கு முன் உதராணம் தான் இந்த இடைத்தேர்தலின் முடிவுகளாகும்.இந்திய மக்களை எல்லா காலத்திலும் ஏமாற்றலாம் என நினைக்கும் பாஜக 2019- ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் வீட்டிற்கு நிச்சியமாக போகும். அதற்கு தான் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்காட்சிகள் தயராகி இருக்கிறார்கள். அதே போன்று தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்தியாவின் முதல் குடிமகன் சொல்லக்கூடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்பட்ட அவமானம் என்னவென்றால் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியையும் அனுமதிக்க வில்லை. இது மிகவும் கண்டனத்துகுறியதாகும். தாழ்த்தப்பட்டவர் என்பது என்ற காரணத்தால் இவருக்கு ஏற்பட்ட அவமானமாகும். இந்தியாவில் இன்று மீண்டும் தலை எடுக்கும் சாதிய பேதங்களை ஓழிக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் தான் முடியும்.

மத்திய அரசு கல்வி திட்டத்தில் ஓரு மாற்றத்தை திணிக்க முயற்சி செய்து வருகிறது. வேதபாடசாலையில் சமஸ்கிருத படிக்கிற மாணவர்கள் 33 மதிப்பெண் பெற்று இருந்தால் அவர்களை நேரடியாக பத்தாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கூறி இருப்பது தனியார் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் பரவயில்லை என்கிற மனநிலையில் தான் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் என்னமாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பு இல்லாமல் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கோட்டு கொள்கிறேன்.

ஆலை பிரச்சினை தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸடாலின் சொன்ன ஆலோசனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்தில் எடுத்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதே போன்று தமிழக சட்டசபையை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதே போல நீட் தேர்வு முடிவுகள் வந்த போது ஆக கடைசியில் தமிழக வந்துள்ளது என்பது வேதனைக்குரியதாகும். அதேபோல் தமிழகத்தில் நீட் தேர்வால் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களின் மருத்துவராக வரவேண்டிய கனவு தகர்ந்து போய்விட்டது. இப்போது இரண்டு மாணவிகள் நீட் தேர்வில் தோல்வியால் இறந்து போய்விட்டார்கள் இதற்கு தமிழக அரசு என்ற செய்ய போகிறது. இதற்கு தமிழக அரசு சரியான பதில் சொல்லி ஆகவேண்டும்.

தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைவதற்கு அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும். அனைவரும் வேண்டுகோள் படி விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய ஓட்டு மொத்த எதிர்காட்சிள் ஓருங்கிணைந்து செயல் பட்டு வருகிறோம். எக்காரணம் கொண்டு பி.ஜே பி.யை கால் வைக்கவிட மாட்டோம் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் . அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோரிக்கை வைத்தது தலைமை காஜி மட்டுமே இருக்கிறார். அனைத்து மாவட்டங்களுக்கு அரசு காஜியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் அரசு டவுன் காஜியை நியமணம் செய்யப்பட்டது. அதன் பிறகு முதல்வர் கலைஞர் ஆட்சி வந்து பிறகு காலியாக உள்ள 27 மாவட்டங்களுக்கு அரசு டவுன் காஜியை நியமணம் செய்தார்கள். அரசுக்கு மக்களுக்கு பழமாக இருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறைந்த பட்ச ஊதியமாக இருபது ஆயிரம் வழங்க உத்தரவிட்டார் . அது மட்டுமல்லாமல் நிலுவை தொகையுடன் ஏழு மாவட்ட காஜிகளுக்கு நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கிறார். எங்கள் கோரிக்கை ஏற்று ஊதியம் வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.அதே போன்று மாவட்ட அரசு காஜிகள் கொடுக்கும் திருமண பதிவு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சியை கேட்டு கொண்டார் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கூறினார்.

Web Design by The Design Lanka