விஜ­ய­க­லாவை விசா­ரணை செய்யும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்­தீ­பிடம் » Sri Lanka Muslim

விஜ­ய­க­லாவை விசா­ரணை செய்யும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்­தீ­பிடம்

ladeef13

Contributors
author image

Editorial Team

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை மீண்டும் உரு­வாக்க வேண்­டு­மென்­பதே தமது முக்­கிய நோக்கம் என்று இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளைத் தள­ப­தியும், போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு, திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் குற்­ற­வியல் விவ­கா­ரங்கள் தொடர்­பி­லான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீ­பிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­களைக் கருத்­திற்­கொண்டு அவற்றை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர நேற்று இவ்­வாறு குற்­ற­வியல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கைய­ளித்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீ­பிடம் ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்­ளன. இது குறித்த விசா­ர­ணைகள் குற்­ற­வியல் விவ­கா­ரங்­களைக் கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் கீழ், பொலிஸ் தலை­மை­ய­கத்தில் உள்ள சிறப்புக் குற்­றத்­த­டுப்புப் பிரி­வூ­டாக செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஆரம்­ப­கட்ட விசா­ரணை நட­வ­டிக்­கைகள் நேற்று ஆரம்­பிக்­கப்பட்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்­நி­லையில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் குறித்த உரை தொடர்பில், முதல் கட்­ட­மாக எவ்­வித மாற்­றங்­க­ளையும் செய்­யாத காணொ­லி­களைப் பெற விசா­ர­ணை­யா­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் இத­னை­விட அவர் குறித்த உரையை ஆற்றும் போது அங்­கி­ருந்­த­வர்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்தி சாட்­சி­க­ளையும் பதிவு செய்­ய­வுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

முன்­ன­தாக தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய முறைப்­பாடு ஊடாக பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யி­ருந்­தது.

அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பை மீறும், பயங்­க­ர­வாத தடைச் சட்டம், தண்­டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புரிந்­துள்­ள­தாகக் கூறி அவரை உடன் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு சார்பில் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்­தவும் பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தார். இத­னை­விட பிவி­துரு ஹெல உரு­ம­யவும் விஜய கலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடளித்திருந்தது. இந்த அனைத்து முறைப்பாடுகளையுமே பொலிஸ் மா அதிபர் நேற்று குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் ஒப்படைத்து விசாரணைகளை நடாத்த உத்தரவிட்டுள்ளார்.
-Vidivelli

Web Design by The Design Lanka