இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்! » Sri Lanka Muslim

இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்!

36559794_2183814868301363_6645651103813730304_n

Contributors
author image

ஊடகப்பிரிவு

‘இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கையினை (Investment Protection Agreement) நிறைவு செய்ய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். எமது நாடு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை கொண்ட ஒரு திறந்த நாடு. நாம் சகலரையும்; ஏற்றுக்கொள்கின்றோம். எமது இருதரப்பு வர்த்தக நிலைகள் தற்போது வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில் இருப்பதையிட்டு நான்மகிழ்ச்சியடைகின்றேன்’ என இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர்; அஹமட் அலி அல் முல்லா தெரிவித்தார்.

நேற்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட மரியாதை அழைப்பொன்றின் நிமித்தம் அவ் அமைச்சிற்கு தனது கன்னி விஜயத்தினை மேற்கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் அமைச்சர் ரிஷாட்டை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான உறவுகள் சுமூகமானதும்இ வரலாற்று சிறப்புமிக்கதாகும்;. இந்த உறவுகளின் முக்கிய தூண்கள் வர்த்தகமும் முதலீடுகளுமே ஆகும். எமது இருதரப்பு வர்த்தக நிலைகள் தற்போது வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில் இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன.; மேலும்இலங்கையில் இருந்து அதிகமான ஏற்றுமதிகளை அழைக்க நாங்கள் விரும்புகிறோம். எங்கள் உறவுகளை மேலும் வளர்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

இலங்கையில் ஒரு முன்னணிமுதலீட்டாளர் அரேபியர் ஆவார். முதலீட்டு திட்டங்கள்இ வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையிலும் இலங்கையுடன் நாங்கள் பங்காளிக்க விரும்புகிறோம். முடிந்தால் இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்புஉடன்படிக்கை (Investment Protection Agreement) நிறைவு செய்ய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். எமது நாடு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாதுறை கொண்ட ஒரு திறந்த நாடு. நாம்சகரையும்; ஏற்றுக்கொள்கின்றோம் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின் படி – 2017 ஆம் ஆண்டில் இலங்கை;ககும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம் ஒருவரலாற்று ரீதியல்; முன்னொருபோதும் இல்லாதவாறு 1.83 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகத்தில் ஒரு பெரிய அதிகரிப்பைகாட்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து இது 37% வளர்ச்சியை காட்டியுள்ளது. என்றார் முல்லா.

இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்கையில்: இலங்கையுடன் முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு உறவுகளை முன்னெடுத்துச்செல்வதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் அஹமட்அலி அல் முல்லாவின் ஆர்வத்தை வரவேற்கின்றோம். தற்போது இரு அரசாங்கங்களும் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கைக்கு கைசாத்திடுவதற்கு தேவையான குறிப்புகள் பரிமாறி வருகின்றன. இருநாடுகளும் இறுதி பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்படிக்கையில் உடன்படுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் வலுவான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சிஅடைகிறேன். இலங்கைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எமது வர்த்தகத்தில் 82 சத வீதமான இறக்குமதிகனை மேற்கொள்கின்றது.

ஆனால் 18 சதவீதமான எமது ஏற்றுமதி ஐக்கிய அரபுக்கு செல்கின்றது. எனவே எங்கள் ஏற்றுமதி கூடை விரிவாக்க விரும்புகின்றோம்;. இலங்கையிலிருந்து அதிகமான பொருட்களை வாங்குவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். 2017 ஆம் ஆண்டு மொத்த வர்த்தகத்தில் 82% ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய இறக்குமதிகளாக பெற்றொலிய தயாரிப்புக்கள் (மொத்தஇறக்குமதிகளில் 70%) – பெற்றொலிய எண்ணெய்இ எரிபொருள் எண்ணெய்இ பெற்றொல்இ மண்ணெண்ணெய் எரிபொருள்கள்இ பிற்றுமண் மற்றும் தங்கம் (மொத்தம் 16%) ஆகியன காணப்பட்டன.

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு குடா நாட்டிற்கு; தேயிலை (மொத்த ஏற்றுமதியில் 28%) ஆடை (18%) எரிபொருள் எண்ணெய் (15.4%) மற்றும் வினிகர் போன்ற பானங்கள் ஏற்றுமதிக்கு ஏற்றுமதிசெய்யப்பட்ன.

சவுதி அரேபியாவிற்கு பிறகுஇ ஐக்கிய அரபு பாரசீக வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 377 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட இரண்டாவது பெரியபொருளாதாரம் ஆகும் என்றார் அமைச்சர்.

4JUL (1)

36559794_2183814868301363_6645651103813730304_n

Web Design by The Design Lanka