அனுமன் ஒரு முஸ்லிம்'' » Sri Lanka Muslim

அனுமன் ஒரு முஸ்லிம்”

hanuman

Contributors
author image

Editorial Team

(BBC)


அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என உத்தரப்பிரதேச மாநில பாஜக மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமனை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சமண துறவி ஒருவர், அனுமன் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்றார். இதுபோல பல்வேறு தரப்பினரும் அனுமனை மதம், ரீதியில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Web Design by The Design Lanka