இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு » Sri Lanka Muslim

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த தொழிற்துறையில் உள்ளவர்களும் வர்த்தகர்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத இறக்குமதி வரி மற்றும் ஆபரண தொழிற்துறையில் அதன் மோசமான பிரதிபலிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தேசிய இரத்தினக்கற்கள் ஆபரண அதிகார சபையின் சில முன்மொழிவுகளும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இரத்தினக்கல் அகழ்விற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது அரச நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இரத்தினக்கல் அகழ்விற்கு காணிகளை விடுவிக்கும்போது அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த பிரச்சினைகளில் தற்போது தீர்வுகளை வழங்கக் கூடிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜூலை மாதம் 12ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.விஜேதுங்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல பண்டார ஜயரத்ன ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.05

Web Design by The Design Lanka