விஜயகலாவின் கருத்தானது புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு நெருப்புக் கிடங்கில்.. » Sri Lanka Muslim

விஜயகலாவின் கருத்தானது புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு நெருப்புக் கிடங்கில்..

naamal

Contributors
author image

ஊடகப்பிரிவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வது குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையப்போவதில்லை.அந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கான நடவடிக்கையாகவே இராஜினாமா கலாசாரத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது. எனினும் அவருக்கு எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது குறித்து கூட்டு எதிர்க்கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளரர் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்துடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை நாம் முழு அளவில் நிராகரிப்பதுடன் அதற்கெதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கிறாரா என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.

முன்னாள் அரசாங்கம் இனவாதத்தை தலைதூக்கும் வகையில் செயற்பாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றறம்சாட்டி வந்தது. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இனவாதம் மாத்திரமல்லாது மீண்டும் பயங்கரவவாதம் தலைதூக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே அதற்கெதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை எதிர்பார்த்துள்ளோம்.

விஜயகலாவின் கருத்தானது புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு நெருப்புக் கிடங்கில் பெற்றோல் ஊற்றியதைப்போன்ற விடயமாகும். தமது ஈழக் கோரிக்கை வடக்கில் இன்னும் முன்னெடுக்கப்படுவதாகவே அவர்கள் கருதுவர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் விஜயகலா மகேஸ்வரன் “ தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக்” குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அவர் ஈழக் கோரிக்கையுடையவராக மாறியுள்ளார். எனவே அதற்கான காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையாக இருக்கலாம். எவ்வாறெனினும் அரசாங்கத்திலிருந்துகொண்டு பயங்கரவாதத்தை வளர்ப்பவர்கள் நாட்டில் உள்ளதாகவே சர்வதேசத்திற்கு தகவல் சென்றடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

JOINT OPPOSITION TAMIL MEDIA UNIT

Web Design by The Design Lanka