15 ஆண்டுகளுக்கு பிறகு ம.பி அமைச்சரவையில் முஸ்லிம் » Sri Lanka Muslim

15 ஆண்டுகளுக்கு பிறகு ம.பி அமைச்சரவையில் முஸ்லிம்

_104958330_9986671b-07cf-41fc-9671-31d01d97fc61

Contributors
author image

Editorial Team

மத்திய பிரதேசத்தில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

நீண்ட இழுபறிக்கு பின் 28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். ஆரிப் அகியூல் என்ற முஸ்லிம் ஒருவரும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். போபால் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்தது” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தமிழ் இந்து)

Web Design by The Design Lanka