யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத் துறை ஏற்பாட்டில் நடைபெறும் நாடக விழாவுக்கு ஜனாதிபதி அவர்கள் நிதி அன்பளிப்பு » Sri Lanka Muslim

யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத் துறை ஏற்பாட்டில் நடைபெறும் நாடக விழாவுக்கு ஜனாதிபதி அவர்கள் நிதி அன்பளிப்பு

01 (1)

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், “வெறுவெளி அரங்கக் குழுவும்” இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதி அவர்களை கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அன்பளிப்பு செய்தார்.

இதற்கான காசோலையினை கையளிக்கும் நிகழ்வு நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய திரு ச. சுஜீவன் அவர்களிடம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரன் அவர்களும் ஜனாதிபதியின் கலைச் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்க அவர்களும் இதன்போது உடனிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.07.05

01 (1)

Web Design by The Design Lanka