புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் ‘கவரலாம்’ » Sri Lanka Muslim

புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் ‘கவரலாம்’

image_50d45f5ea3

Contributors
author image

Editorial Team

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இரு நாடுகளினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையானதொன்றும் எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் அதுல் கேஷாப், ஒரு புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றபோது, இலங்கை அரசாங்கமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றி பிரியாவிடை பெற்றுச் செல்லும் தூதுவர் அதுல் கேஷாப், இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினரை, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நாட்டின் குறிக்கோள்கள் சாதகமானவையாகக் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், சர்வதேச அரங்கில் இலங்கை பெற்றுள்ள நன்மதிப்பை அலட்சியமாக எடுத்துவிடக்கூடாது என்றும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்றபோது, இலங்கை அரசாங்கமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்புக்குப் பின்னர் நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளை, இலங்கை அரசு பூரணமாக நிறைவேற்றாமல் இருப்பதாகவும் எடுத்துக் கூறிய, சர்வதேச சமூகத்துக்கு, இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எடுத்துரைத்துள்ளார்.

“சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளை, இலங்கை அரசு பூரணமாக நிறைவேற்றாமல் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மிகத் தாமதமாக ஸ்தாபிக்கப்பட்டதையும், நட்டஈடு தொடர்பான சட்டமூலம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளமையையும், பொறுப்புக்கூறல் தொடர்பில் எவ்வித நடைமுறைகளும், அதாவது உண்மையைக் கண்டறிதல், நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான ஆணைக்குழு இன்னமும் ஸ்தாபிக்கப்படாமல் உள்ளமையையும் எடுத்துக்காட்டினார்.

அதேவேளை, புதிய அரசமைப்பு யாப்பு உருவாக்கம் ஒரு நல்ல ஆரம்பத்தைக் காட்டியபோதும் தற்போது அதனை முன்னெடுத்துச் செல்வதில் தேவையற்ற தடைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டிய இரா. சம்பந்தன், தற்போது நிலவும் இந்தத் தாமதங்களுக்கான நியாயபூர்வமான எந்தவொரு காரணத்தையும் தன்னால் இனங்காண முடியாதென்றார்.
எமது மிகப்பிரதானமான நோக்கம் நாட்டு நலன் பற்றியதேயாகும், ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுகின்ற போது,

இந்த நாட்டில் உள்ள அனைவரும் நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பொன்றை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவது கடினமான விடயமல்ல என்பதனையும் இரா. சம்பந்தன் இதன்போது எடுத்துக்காட்டினார்

வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் பிரிபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டுக்குளேயே தீர்வொன்றை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறெனினும், எண்ணிக்கையில் பெருமளவில்லாத குரலெழுப்பும் சிலர் ஒரு தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். அப்படியானவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்கள் சமூகத்திலே கொண்டு வரக்கூடிய எதிர்மறையான விளைவுகளையும் தடுப்பதற்குமுள்ள ஒரே வழிமுறை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதேயாகும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

எமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அரசாங்கம் இவற்றை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில், தமிழ் மக்கள் ஒருபோதும் இந்நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிமை பேரவையின் பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இரு நாட்டினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையாதொன்றும் தெரிவித்தார். நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நாட்டின் குறிக்கோள்கள் சாதகமானவையாகக் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், சர்வதேச அரங்கில் இலங்கை பெற்றுள்ள நன்மதிப்பை அலட்சியமாக எடுத்aதுவிடக்கூடாது என்றும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்றபோது, இலங்கை அரசாங்கமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்த அதேவேளை, தனது காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்காகவும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அவரது சக பணியாளர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆகியோரின் அனைத்துப் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

Web Design by The Design Lanka